எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மேட்டூர் : மேட்டூர் அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியிலிருந்து 10,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை 106.81 அடியில் இருந்து 106.60 அடியாக குறைந்துள்ளது. காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,063 கன அடியிலிருந்து வினாடிக்கு 9,466 கன அடியாக குறைந்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை(நவ.8) காலை 8 மணிக்கு வினாடிக்கு 12,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 10,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 73.66 டிஎம்சியாக உள்ளது.
இதற்கிடையே 90 ஆண்டுகளில் முதல்முறையாக மேட்டூர் அணையை தூர்வார தமிழக நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. சோதனை அடிப்படையில் அணையின் குறிப்பிட்ட பகுதியில் 1.40 லட்சம் யூனிட் வண்டல் மண் தூர்வாரப்படவுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி பெற ஆலோசகர்களை நியமனம் செய்ய நீர்வளத்துறை டெண்டர் கோரியுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025


