முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்க்கட்சிகள் கூறும் குறைகளுக்கான விடையை 2026 தேர்தலில் மக்கள் தெரிவிப்பார்கள்: அமைச்சர் சேகர்பாபு

சனிக்கிழமை, 9 நவம்பர் 2024      தமிழகம்
Sekarbabu-2023 04 06

சென்னை, ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குறைகளை சொல்லத்தான் செய்வார்கள். இதற்கான விடையை 2026 தேர்தலில் மக்கள் தெரிவிப்பார்கள்என்று இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் மண்டலம், 74-வது வார்டு புதிய வாழைமாநகரில் ரூ.93.25 கோடியில் புதிதாக இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. ஏகாங்கிபுரத்தில் ரூ. 40 லட்சத்தில் பல்நோக்குக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இவற்றின் திறப்பு விழா  அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா பங்கேற்று விளையாட்டு அரங்கையும், பல்நோக்கு கட்டிடத்தையும் திறந்துவைத்தார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

தமிழகத்தில் நிதி பற்றாக்குறை இருந்த போதிலும், ஜி.எஸ்.டி. வரியில் தமிழகத்தின் பங்கு அளிக்கப்படாத நிலையிலும், தமிழகத்துக்கான வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்காத நிலையிலும் வளர்ச்சி பணிகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் புதிய புதிய திட்டங்கள், தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்புகள் அத்தனையும் நிறைவேற்றி ஒட்டுமொத்த இந்தியாவிலேயே வலிமை மிக்க தலைவராக முதல்வர் ஸ்டாலின் திகழ்கிறார்.

அரசிடம் நிதி இல்லாத நிலையிலும் மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை போன்ற திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை ஒதுக்கீடு செய்து மக்களின் வாழ்க்கையில் உயர்வை ஏற்படுத்தியிருக்கிறார். 

கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் தி.மு.க. அரசு வேகமாக செயல்பட்டு வருவதற்கான சான்றாகும். எதிர்க்கட்சிகள் குறைகளை சொல்லத்தான் செய்வார்கள். இதற்கான விடையை 2026 தேர்தலில் மக்கள் தெரிவிப்பார்கள் என்று அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து