முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி வசனம், கவிதை ஒப்பித்தல் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பரிசு வழங்கி பாராட்டு

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2025      தமிழகம்
stalin 2025-02-08

Source: provided

சென்னை: கருணாநிதி வசனம், கவிதை ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் பரிசு வழங்கினார்

தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின், நேற்று, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அலுவலகத்தில்; தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை சார்பில் கலைஞர் நூற்றாண்டினையொட்டி நடத்திய "கருணாநிதி வசனம்/கவிதை ஒப்பித்தல் போட்டி"யில் மாநில அளவில் முதல் பரிசு பெற்ற மதுரை, அரசு நடுநிலைப் பள்ளி 4-ம் வகுப்பு பயிலும்  ஜாக்ஷிக்காவிக்கு ரொக்கப் பரிசாக ரூ.50,000மும் - இரண்டாம் பரிசு பெற்ற புதுக்கோட்டை இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு பயிலும்  மதிவதனிக்கு ரொக்கப் பரிசாக ரூ.30,000மும் – மூன்றாம் பரிசு பெற்ற சென்னை, சைதாப்பேட்டை, பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் இஜாஸ்அகமதுக்கு ரொக்கப் பரிசாக ரூ.25,000மும் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின்போது கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, மாநில கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை தலைவர் வாகை சந்திரசேகர் – செயலாளர் கலைமாமணி இறையன்பன் குத்தூஸ், துணைச் செயலாளர்கள் திருச்சி எழில்மாறன் செல்வேந்திரன், மதுரை சி.வீரகணேசன், அ.ஜாகிர்உசேன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து