எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஏப்ரல் 30-ந்தேதி வரை நடைபெறும் என்றும் 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இதற்கிடையில், சபாநாயகர் அப்பாவுவை அந்த பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் (அ.தி.மு.க.) கடந்த ஜனவரி மாதம் கொடுத்துள்ளார். இந்த தீர்மானத்தின் மீது நேற்று விவாதம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு சட்டசபையை விட்டு வெளியே சென்றார். துணை சபாநாயகர் பிச்சாண்டி அவையை வழிநடத்தினார். இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க. , இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தீர்மானத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பா.ஜ.க, பாமக உறுப்பினர்கள் யாரும் பேரவையில் இல்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
திருச்சியில் தி.மு.க.வை அழித்துவிடலாம் என நினைக்கிறார்கள்: அமைச்சர் பேச்சு
15 Dec 2025திருச்சி, திருச்சியில் தி.மு.க.வை அழித்துவிடலாம் என மத்திய அரசு நினைக்கிறது என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
-
சென்னையில் வரும் 27-ம் தேதி நா.த. கட்சி பொதுக்குழு கூட்டம் : சீமான் அறிவிப்பு
15 Dec 2025சென்னை, வருகிற 27-ந் தேதி நா.த.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
-
இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
15 Dec 202512 அணிகள் இடையிலான 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்து வந்தது.
-
அஸ்வின் பதிவிட்ட வார்த்தை விளையாட்டு
15 Dec 2025சென்னை, அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய்யின் மகனான ‘ஜேசன் சஞ்சய்’ புகைப்படத்துடன் ‘பல்பு ஹோல்டர்’ படத்தை இணைத்து என்ன?
-
இன்று 19-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்ய அபுதாபியில் மினி ஏலம்
15 Dec 2025மும்பை, 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் இன்று அபுதாபியில் நடக்கிறது.
-
ஆஸி.க்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
15 Dec 2025லண்டன், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் ஒரே ஒரு மாற்றத்துடன் இந்த போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள
-
டெல்லியில் லயோனல் மெஸ்ஸி
15 Dec 2025புதுடெல்லி, மெஸ்ஸி 3-வது நாள் சுற்றுப்பயணமாக நேற்று டெல்லி சென்றார். அங்குள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025


