எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணையும் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுபற்றி தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வரமான மு.க.ஸ்டாலின் தி.மு.க.-பா.ம.க. கூட்டணி வதந்தி தான் என விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்து உள்ள பேட்டி விவரம் வருமாறு:-
கே: பா.ம.க. உங்கள் கூட்டணிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி அ.தி.மு.க. கூட்டணிக்கும் செல்லலாம் என்று பேசப்படுகிறதே? அதனால் தான் டாக்டர் ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளிவருவது உண்மையா?
பதில்: நீங்களே முணு முணுப்புகள் என்று சொல்லி விட்டீர்கள். புறந்தள்ளுங்கள். தி.மு.க. கூட்டணி வலிமையாக உள்ளது. தோழமைக் கட்சிகளும் உறுதியாக இருக்கின்றன.
கே: பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி குறித்து உங்கள் பதில் என்ன? இந்த கூட்டணி உங்களுக்கு எதிரான வலிமையான கூட்டணி என நினைக்கிறீர்களா?
பதில்: இது தி.மு.க. அணி யால் ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட கூட்டணிதான்! ஒரு முறை அல்ல, இரு முறை. 2024 பாராளுமன்றத் தேர்தலிலேயே இரு கட்சிகளும் பிரிந்தது போலத் தெரிந்தாலும் கள்ளக்கூட்டணியாகத்தான் இருந்தார்கள் என்று குற்றம் சாட்டினேன். அதை வெளிப்படுத்தும் வகையில்தான் அண்மைக் கால நிகழ்வுகள் இருந்தன. தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்யும் பா.ஜ.க.வையும், அதனுடன் கூட்டணி சேர்ந்து துரோகம் இழைக்கும் அ.தி.மு.க.வையும், மூன்றாவது முறையும் தமிழ்நாட்டு மக்கள் தோற்கடிப்பார்கள்.
கே: நீங்கள் பிரிவினை மற்றும் வெறுப்பு அரசியலை மேற்கொள்கிறீர்கள் என்ற பா.ஜ.க.வின் குற்றச்சாட்டு களுக்கு என்ன சொல்கிறீர்கள்?
பதில்: அரசியல்சட்டம் தந்த கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்க குரல் கொடுப்பதும், அரசியல் சட்ட அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளை வளர்க்கப் பாடுபடுவதும் எப்படி பிரிவினை அரசியலாக இருக்க முடியும்?
வெறுப்பையே அரசியல் கொள்கையாகக் கொண்ட பா.ஜ.க., உருவாக்கிய மதக் கலவரங்கள், இனக கலவரங்கள் இன்னமும் இந்திய வரலாற்றின் கறை படிந்த பக்கங்களாக உள்ளன. மணிப்பூர் மாநிலம் இப்போதும் கலவரத்தின் பச்சை ரத்தம் காயாத பூமியாக உள்ளது.
நாடு போர்க்களத்தில் நின்ற ஒவ்வொரு நேரத்திலும் துணை நின்று, அதிக அளவில் நிதி தந்து இந்த நாட்டிற்கு உற்ற துணையாக இருந்த தமிழ் நாட்டைப் பார்த்து-தி.மு.க.வைப் பார்த்து, பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டுவது, மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்புவது போலத்தான் இருக்கிறது.
கே: உங்கள் கூட்டணிக் கட்சிகள் குறிப்பாக வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட கம்யூனிஸ்டு கட்சிகள் ஆட்சியின் சில அம்சங்களில் குறிப்பாக தமிழ்நாட்டின் மதுபான கொள்கையை பற்றி விமர்சிப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: தோழமைக் கட்சியினரின் ஆலோசனைகள் மட்டுமின்றி ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் கேட்டு, அவர்களின் ஒத்துழைப்புடன் இந்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தோழமைக் கட்சியினரின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை நான் எப்போதும் மதிக்கிறேன்.
கே: மார்ச் 31, 2026 நிலவரப்படி நிலுவையில் உள்ள கடன் ரூ.9.29 லட்சம் கோடியாக இருக்கும் என்று உங்கள் அரசு ஒப்புக்கொள்கிறது. அதில் இருந்து எப்படி மீள்வீர்கள்?
பதில்: தமிழ்நாட்டை கடனில் மூழ்கடித்து விட்டு காலி கஜானாவை விட்டுச் சென்ற ஆட்சி, அ.தி.மு.க. ஆட்சி. அதன் பிறகு நிதி நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்து திறம்பட்ட நிதி மேலாண்மை மூலம் நிர்ணயிக்கப்பட்ட கடன் வரம்புக்குள் உள்ள மாநிலம், தமிழ்நாடு. 10 லட்சம் கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் பல தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு, பொருளாதாரச் சூழலை நாங்கள் முன்னேற்றியுள்ளோம்.
முதலீட்டாளர்களின் முதல் முகவரி என்பது தமிழ்நாட்டின் அடையாளமாகியுள்ளது. 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்குடன் முன்னேறுகிறோம். தேவைப்படும் அளவிற்கு கவனமாக பொறுப்புடன் அதனைப் பெற்று மாநில முன்னேற்றத்திற்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
கே: தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களிடையே போதைப் பொருட்களின் பயன்பாடு திடீரென அதிகரித்துள்ளதாக தெரிகிறது. உங்கள் பதில்?
பதில்: இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களின் நிலையையும் நீங்கள் அறிவீர்கள். நாடு முழுவதும் கவலையளிக்கக்கூடிய ஒன்றை, தமிழ்நாட்டிற்கு உரியதாக சுருக்கிப் பார்ப்பது சரியான பார்வையாக இருக்காது.
அ.தி.மு.க. ஆட்சியில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறினார்கள். ஆனால் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு-போதைப் பொருள் விற்போரின் வங்கி கணக்குகளை முடக்குவது, கடைகளை சீல் வைப்பது, அதிகபட்ச சிறை தண்டனை பெற்றுத்தருவது எனத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். குட்கா போன்ற போதை பொருட்கள் கடந்தகால ஆட்சியில் எந்தளவுக்குப் புழங்கின என்பதும், அன்றைய அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் வரை அதில் தொடர்பு டையவர்களாக இருந்ததையும் தமிழ்நாடு அறியும்.
தற்போது வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் நார்க்கோடிக் வகைகள், இந்தியாவின் மேற்குப் பகுதியில் இருந்து துறைமுகங்கள் வாயிலாக உள்ளே நுழைந்து, இந்தியாவின் அனைத்து திசைகளிலும் உள்ள மாநிலங்களுக்குள் ஊடுருவுகிறது என்பதைப் பத்திரிகைகள் தொடர்ந்து எழுதி வருகின்றன. நுழைவாயிலின் காவல் ஒன்றிய அரசிடம் தான் உள்ளது.
கே: ஜனவரியில், சிந்து சமவெளி நாகரீக இடங்களில் காணப்படும் கல்வெட்டுகளை புரிந்து கொள்வதற்காக நீங்கள் ஒரு மில்லியன் டாலர் பரிசு தொகை அறிவித்து இருக்கிறீர்கள். இது திராவிட-ஆரியப் போராட்டத்தின் நீட்சியா?
பதில்: 3000 ஆண்டுகள் பழமையான சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற கருதுகோளை வெளியிட்டவர் பிரிட்டிஷ் இந்தியாவின் தொல்லியல் துறைத் தலைவரான சர் ஜான் மார்ஷல். அந்த ஆய்வு முடிவுகள் வெளியான நூற்றாண்டில், சிந்துவெளி அகழாய்வில் கிடைத்த எழுத்து வடிவங்களை புரிந்து கொள்ள வழிவகை செய்தால் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகை என அறிவிக்கப்பட்டது. இது ஆரிய-திராவிட போராட்டத்தின் நீட்சியல்ல.
ஆரியத்துக்கு முந்தைய இந்த மண்ணின் பண பாடான திராவிடத்தை ஆய்வுப்பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் நிலைநாட்டும் முயற்சி. எழுத்து வடிவம் குறித்த வெற்றிகரமான முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கி றேன்.
கே: துணை முதல்-அமைச்சர் உதயநிதியின் செயல்பாட்டை எப்படி மதிப்பிடுவீர்கள்?
பதில்: துணை முதல்-அமைச்சர் எனக்கும் துணையாக இருந்து பணியாற்றுகிறார். தமிழ்நாட்டு மக்களுக்கும் துணையாக இருந்து திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறார்.
கே: நீட் தேர்வு மசோதாவை ஜனாதிபதி நிறுத்தி வைத்ததை ஒரு எதேச்சதிகார செயல் என்றும் கூட்டாட்சி வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாசம் என்று நீங்கள் கூறி இருந்தீர்கள். ஆனால் நீட் செயல்படுத்தப்பட்டபோது தி.மு.க. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகித்ததே?
பதில்: தி.மு.க பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது இந்திய மருத்துவக் கவுன்சில் நீட் தேர்வைப் பரிந்துரைத்தபோதே அதனை எதிர்த்து வழக்கு தொடுத்தவர் அன்றைய முதல்வர் கலைஞர்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் பரிந்துரையை ஏற்கவில்லை. மாநிலங்களின் விருப்ப உரிமையாக அது அமைந்தது. தி.மு.க தொடர்ந்த வழக்கிலும் சாதகமான தீர்ப்பு கிடைத்தது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலேயே "நீட் தேர்வு செல்லாது" என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வெளிவந்து விட்டது. தி.மு.க ஆட்சியில் இருந்த காலம்வரை நீட் தேர்வு தமிழ்நாட்டில் நடைபெறவில்லை. ஏன், அம்மையார் ஜெயலலிதா இருந்தவரைகூட நீட் தேர்வு நடக்கவில்லை. நீட் தேர்வு செல்லாது என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பா.ஜ.க. ஆட்சி காலத்தில் தான் திரும்ப பெறப்பட்டது. பா.ஜ.க.விடம் தங்களை அடகுவைத்துவிட்ட அ.தி.மு.க. தலைவர்கள், பதவியில் நீடிப்பதற்காக-பா.ஜ.க. விருப்பப்படி தமிழ்நாட்டில் நீட் தேர்வைத் திணித்தார்கள். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
உதய்பூரில் இன்று நடக்கும் திருமண நிகழ்வில் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகாவை கரம் பிடிக்கிறார்
01 Feb 2026ஐதராபாத், விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி ராஜஸ்தானின் உதய்பூரில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இன்று திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
-
தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி தகுதிக்கான ‘டெட்’ தேர்வில் 1.50 லட்சம் பேர் தேர்ச்சி
01 Feb 2026சென்னை, பள்ளி ஆசிரியர் பணித் தகுதிக்கான ‘டெட்’ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு 1.50 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எச்.ராஜாவை நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்
01 Feb 2026சென்னை, பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார்.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
01 Feb 2026புதுடெல்லி, சி.பி.ஐ. புலன்விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
-
தைப்பூசத் திருநாள்: இ.பி.எஸ். வாழ்த்து
01 Feb 2026சென்னை, தைப்பூசத் திருநாள் வினைகள் விலகி வெற்றிகள் மலரும் நாள் என எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்: மத்திய பட்ஜெட்டிற்கு இ.பி.எஸ். வரவேற்பு
01 Feb 2026சென்னை, 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து சாதனை படைத்துள்ள நிர்மலா சீதாராமனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் இல்லை: பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. எம்.பி.,க்கள் கடும் முழக்கம்
01 Feb 2026புதுடெல்லி, பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என தி.மு.க. எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர்.
-
மத்திய பட்ஜெட் 2047-ல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் உள்ளது: பிரதமர் நரேந்திரமோடி புகழாரம்
01 Feb 2026புதுடெல்லி, தொலைநோக்குடன், நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 2047-ல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில
-
வரும் 2026 - 27ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.17.2 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு: பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2026டெல்லி, வரும் 2026 - 27ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.1.27 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
சாமானிய மக்களுக்கு எதுவும் இல்லை: மத்திய பட்ஜெட் குறித்து மம்தா கருத்து
01 Feb 2026டெல்லி, 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மக்களுக்கு விரோதமான பட்ஜெட் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு ஜனாதிபதியுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
01 Feb 2026டெல்லி, 2026 - 27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு ஜனாதிபதி திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார்.
-
திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Feb 2026சென்னை, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
வரி தாக்கலின் போது பொய் கணக்கு காட்டினால் 100 சதவீதம் அபராதம்: பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
01 Feb 2026புதுடெல்லி, வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய வருமான வரிசட்டம் நடைமுறைக்கு வரும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி தாக்
-
எதிர்பார்ப்பை பொய்க்கச்செய்து, ஏமாற்றத்தை தந்துள்ளது: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நலன்கள் முற்றிலும் புறக்கணிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
01 Feb 2026சென்னை, மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்பை பொய்க்கச்செய்து, ஏமாற்றத்தை தந்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நலன்கள் முற
-
ஜனவரி மாதம் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1.93 லட்சம் கோடி..!
01 Feb 2026புதுடெல்லி, கடந்த ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல்(சரக்கு மற்றும் சேவை வரி) ரூ.1.93 லட்சம் கோடியை தாண்டியது.
-
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: தைப்பூசத்திற்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி
01 Feb 2026புதுடெல்லி, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று தைப்பூசத்தை முன்னிட்டு தமிழில் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன் நிதியமைச்சக குழுவினருடன் நிர்மலா சீதாராமன் புகைப்படம்
01 Feb 2026டெல்லி, எதிர்வரும் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட், பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
-
முன்னாள் முதல்வர் ஓமந்தூராருக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Feb 2026சென்னை, சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்வி வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஓமந்தூராருக்குத் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிப்பு
01 Feb 2026டெல்லி, மின்சார வாகனங்களை ஊக்குவிக்க லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மத்திய பட்ஜெட்டில் எஸ்.டி.டி.யை அதிகரித்ததால் பங்குச்சந்தைகள் திடீர் வீழ்ச்சி
01 Feb 2026புதுடெல்லி, மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எஸ்.டி.டி.
-
வார ராசிபலன்
01 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
01 Feb 2026- நெல்லையப்பர் கோவிலில் செளந்திரசபா நடனம்.
- வைத்தீசுவரன் கோவிலி செல்வமுத்து குமாரசுவாமி புறப்பாடு.
- திருச்சேறை சாரநாதர் சப்தாவர்ணம்.
- சென்னை சிங்காரவேலவர் தெப்பம்
-
இன்றைய ராசிபலன்
01 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
01 Feb 2026


