முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே 8- முதல் 10-ம் தேதி வரை 3 நாட்கள் உக்ரைன் போர் தற்காலிக நிறுத்தம்: ரஷ்ய அதிபர் புதின் திடீர் அறிவிப்பு

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2025      உலகம்
Putin 2023-03-02

Source: provided

மாஸ்கோ : அடுத்த மாதம் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை 3 நாட்களுக்கு போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர்  ஆயிரத்து 159வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதனிடையே, கிறிஸ்தவ மதத்தினரின் முக்கிய நிகழ்வான ஈஸ்டர் பண்டிகை கடந்த 20ம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் மட்டும் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அமல்படுத்தியது. அதன்பின்னர், மீண்டும் போர் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேவேளை, போர் நிறுத்தம் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார்.

இந்நிலையில், உக்ரைன் போரை 3 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை 3 நாட்களுக்கு போரை தற்காலிமகாக நிறுத்துவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததன் 80ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி உக்ரைன் போர் 3 நாட்கள் நிறுத்தப்படுகிறது. இரண்டாம் உலகப்போரின் முக்கிய போராக 'பெரும் தேசபக்தி போர்' பார்க்கப்படுகிறது. ஜெர்மனியை எதிர்த்து சோவியத் யூனியன் (ரஷ்யா) போரிட்டதே 'பெரும் தேசபக்தி போர்' என அழைக்கப்படுகிறது. அந்த போர் நிறைவடைந்த 80ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி உக்ரைன் போரை 3 நாட்கள் நிறுத்த புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.

3 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் தொடர்பான ரஷ்யாவின் அறிவிப்பிற்கு உக்ரைன் தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து