முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாஷிங்டன் சுந்தரை களமிறக்கலாம்: ரவிச்சந்திரன் அஸ்வின் அட்வைஸ்

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2025      விளையாட்டு
Ashwin 1

Source: provided

மான்செஸ்டர் : நம்பிக்கை இருந்தால் கருண் நாயருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தரை களமிறக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்திருக்கிறார்.

4-வது டெஸ்ட்...

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ‘ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில்’ விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா ஒரு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இங்கிலாந்து 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் இருக்கிறது. இந்தத் தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் 4-வது போட்டி மான்செஸ்டரில் இன்று (ஜூலை 22) தொடங்குகிறது.

பின்னடைவு...

கட்டாயமாக வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் களமிறங்கும் இந்திய அணியில், வீரர்கள் ஒவ்வொருவராக காயமடைந்து வருவது இந்திய அணிக்கும் மிகவும் பின்னடைவாக அமைந்துள்ளது. நிதிஷ் ரெட்டி, ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் விலகிய நிலையில், அன்ஷுல் காம்போஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளையாட விடுங்கள்...

இந்த நிலையில், இது குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசும்போது, “குல்தீப் விளையாட வேண்டும் என்று நிறைய பேர் கூறியுள்ளனர். வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங்கில் உங்களுக்கு அதிக நம்பிக்கை இருந்தால், அவரை 3-வது இடத்தில் விளையாட வைத்துவிட்டு குல்தீப்பையும் அணியில் விளையாட விடுங்கள். உங்களுக்கு ஒரு வழி இருக்கிறது. கருண் நாயருக்கு பதிலாக சாய் சுதர்ஷன் அல்லது வாஷிங்டன் சுந்தரை கொண்டு வர விரும்புகிறீர்களா? நான் இப்படித்தான் யோசிப்பேன்.

சுதர்ஷன் அல்லது துருவ்...

நிதிஷ் குமார் காயம் காரணமாக விளையாடவில்லை. நிதிஷ் தயாராக விளையாடவில்லை என்றால், நான் ஷர்துல் தாக்கூரை கொண்டு வரலாமா? அல்லது நான் ஒரு சிறப்பு பேட்டரை விளையாட வைக்க விரும்புகிறேனா? என சிந்திப்பேன். வாஷிங்டனை விளையாட வைக்க விரும்புவேன். ஜடேஜாவும் இருப்பார். ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக, சாய் சுதர்ஷன் அல்லது துருவ் ஜாரெலை விளையாட வையுங்கள்” எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து