முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொள்ளாச்சி நகராட்சியை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 5 ஆகஸ்ட் 2025      தமிழகம்
EPS 2024-04-10

சென்னை, பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து  அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி நகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.  அனைத்து வார்டுகளிலும் வளர்ச்சிப் பணிகள் நடைபெறுவதில்லை.   பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நிறைவடைந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. குடிநீர் சீராக விநியோகிக்கப்படுவதில்லை; தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை; குப்பைகள் அகற்றப்படுவதில்லை. இதனால் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

 பொள்ளாச்சி நகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளை கண்டித்தும், மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அ.தி.மு.க. பொள்ளாச்சி நகரத்தின் சார்பில், 13.8.2025 (புதன் கிழமை) காலை 10 மணியளவில், பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அ.தி.மு.க. தேர்தல் பிரிவுச் செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் பொள்ளாச்சி ஏ. ஜெயராமன் தலைமையிலும் நடைபெறும். இவ்வாறு  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து