முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூனுக்கு நிச்சயதார்த்தம்

வியாழக்கிழமை, 14 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
14-Ram-51-A

Source: provided

மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும் கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கருக்கு தொழிலதிபர் மகளுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

கோவா அணிக்காக... 

25 வயதாகும் அர்ஜுன் டெண்டுல்கர், ஐபிஎல் தொடரில் 2021 முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால், 5 முறை மட்டுமே இவருக்கு விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் தரப் போட்டியில் கோவா அணிக்காக 2022ஆம் ஆண்டு அறிமுகமான அர்ஜுன் டெண்டுல்கர், முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்தார்.

திடீர் நிச்சயதார்த்தம்...

இந்த நிலையில், அர்ஜுன் டெண்டுல்கருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளான சானியா சந்தோக்கிற்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. மிகவும் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் மட்டுமே கலந்துகொண்ட நிகழ்வாக நடைபெற்றுள்ளது.

சானியா சந்தோக்?

மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரவி காய் என்பவரின் பேத்திதான் சானியா சந்தோக். கிராவிஸ் குழுமத்தின் தலைவராக உள்ள ரவி காய், தி புரூக்ளின் க்ரீமரி மற்றும் பாஸ்கின் ராபின் ஆகிய பிரபல ஐஸ்கிரீம் நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர். இவரின் தந்தைதான் குவாலிட்டி ஐஸ்கிரீம் பிராண்டின் நிறுவனர். லண்டன் ஸ்கூள் ஆஃப் எகனாமிக்ஸில் பட்டம் பெற்ற சானியா, கால்நடை தொழில்நுட்பத்தில் டிப்ளோமா படித்துள்ளார். மும்பையில் உள்ள பாவ்ஸ் பெட் ஸ்பா அண்ட் ஸ்டோர் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து