முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியை சந்திக்கும் மெஸ்ஸி

வெள்ளிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2025      இந்தியா      விளையாட்டு
Messi-2025-08-15

கொல்கத்தா, மெஸ்சி வருகிற டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார். அவர் கொல்கத்தா, மும்பை, டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது உறுதியாகியுள்ளது மெஸ்சி வருகிற டிசம்பர் 12-ந் தேதி கொல்கத்தா வந்தடைகிறார். தொடர்ந்து பல்வேறு நிழச்சிகளில் பங்கேற்க உள்ள மெஸ்ஸி டிசம்பர் 12-ந் தேதி டெல்லியில்  பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் .

அதிக கோல்கள்... 

கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி கடந்த (2022-ம் ஆண்டு) உலகக் கோப்பையை வென்று அசத்தியது. உலகின் சிறந்த வீரர் விருதை 8 முறை கைப்பற்றி சாதித்துள்ள 38 வயது முன்கள வீரரான மெஸ்சி ஒரு ஆண்டில் அதிக கோல்கள் (91), ஒரு கிளப் அணிக்காக அதிக கோல்கள் (பார்சிலோனா கிளப் அணிக்காக 672 கோல்) அடித்தது உள்பட பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறார்.

இந்தியா வருகை....

தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்களை சம்பாதித்து இருக்கும் மெஸ்சிக்கு இந்தியாவிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் , மெஸ்சி வருகிற டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார். அவர் கொல்கத்தா, மும்பை, டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது உறுதியாகியுள்ளது மெஸ்சி வருகிற டிசம்பர் 12-ந் தேதி கொல்கத்தா வந்தடைகிறார். தொடர்ந்து பல்வேறு நிழச்சிகளில் பங்கேற்க உள்ள மெஸ்ஸி டிசம்பர் 12-ந் தேதி டெல்லியில்  பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் .

ஏராளமான ரசிகர்கள்... 

மெஸ்சி 2-வது முறையாக இந்தியா வருகிறார். அவர் முன்னதாக 2011-ம் ஆண்டு கொல்கத்தா சால்ட்லேக் மைதானத்தில் நடந்த வெனிசுலாவுக்கு எதிரான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் பங்கேற்க வந்து இருந்தார். அப்போது அவரை காண ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் திரண்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து