முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் வெள்ளப்பெருக்கு: குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு 2-வது நாளாக தடை

திங்கட்கிழமை, 18 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Kutralam--2023-07-06

தென்காசி, குற்றாலம் மெயின் அருவியில் நேற்று சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க நேற்று 2-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க நேற்று 2-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் மெயின் அருவியில் நேற்று சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசார் அபாய ஒலி எழுப்பி சுற்றுலாப் பயணிகளை அவசர, அவசரமாக வெளியேற்றினர். தண்ணீரின் சீற்றம் குறையாத காரணத்தினால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பழைய குற்றால அருவியிலும் நேற்று முன்தினம் மாலையில் நீர்வரத்து திடீரென அதிகரித்ததால் அங்கும் சுற்றுலாப் பணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. சிற்றருவி மற்றும் புலி அருவியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து