எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மைசூரு : கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறப்பு அதிகரிப்பால் காவிரி கரையோர மக்களுக்கு 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குடகு மாவட்டம், கேரள மாநிலத்துக்கு உட்பட்ட வயநாடு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் காவிரியின் குறுக்கே மண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.) அணைக்கும், மைசூரு மாவட்டத்தில் அமைந்துள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. ஏற்கனவே இந்த 2 அணைகளும் நிரம்பி விட்டதால் அணைகளுக்கு வரும் உபரி நீர் அப்படியே காவிரியில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் காலை நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 124.54 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 33 ஆயிரத்து 52 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. அது மதியம் 3 மணிக்கு வினாடிக்கு 1 லட்சம் கன அடியாக உயர்த்தப்பட்டது. இதேபோல் கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் காலை நிலவரப்படி 2,283.68 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 22 ஆயிரத்து 539 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 23 ஆயிரத்து 846 கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 1 லட்சத்து 23 ஆயிரத்து 846 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் திறப்பு கே.ஆர்.எஸ். அணையில் இருந்து எந்நேரம் வேண்டுமானாலும் 1.20 லட்சம் கன அடியாக உயர்த்தப்படலாம் என்றும், அதனால் காவிரி கரையோர மக்களுக்கு 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தும் நீர்ப்பாசன துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மேலும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படியும் வருவாய் துறை, தீயணைப்பு துறை, பேரிடர் மேலாண்மை துறை, போலீஸ் துறை, பொதுப்பணித்துறை, வனத்துறை, மாவட்ட பஞ்சாயத்து மற்றும் தாலுகா பஞ்சாயத்துகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. காவிரியில் வினாடிக்கு 1.23 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டு இருப்பதால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காவிரி கரையில் உள்ள வழிபாட்டு தலங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. நிமிஷாம்பா கோவில் உள்பட ஏராளமான கோவில்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மண்டியாவில் உள்ள ரங்கனத்திட்டு பறவைகள் சரணாலயம் மூழ்கியது. இதனால் அங்கு படகு குழாம் மூடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் திருமாகூடலு திருவேணி சங்கமம் பகுதியும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதேபோல் காவிரி கரையோரத்தில் உள்ள பல சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
தங்கம் விலை மேலும் சரிவு
19 Aug 2025சென்னை : தங்கம் விலை மேலும் அதிரடியாக குறைந்து விற்பனையானது.
-
உடல் உறுப்பு விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
19 Aug 2025மதுரை : உடல் உறுப்பு விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
முன்னாள் படைவீரர்களுகளை தொழில்முனைவோராக்கும் 'காக்கும் கரங்கள்' திட்டம் தொடக்கம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் - தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடன்
19 Aug 2025சென்னை : சென்னையில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஆக. 19) தொடக்கி வைத்தார்.
-
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தான் அழகி..!
19 Aug 2025ஜெய்ப்பூர், மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை ராஜஸ்தான் அழகி மணிகா விஸ்வகர்மா வென்றார்.
-
எல்லையில் அமைதி: சீனா வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை
19 Aug 2025புதுடெல்லி : கடந்த அக்டோபரில் ராணுவ மோதல் முடிவுக்கு வந்ததில் இருந்து இந்தியாவும் சீனாவும் தங்கள் எல்லையில் உருவான அமைதி மற்றும் நிலைத்தன்மையால் பயனடைந்துள்ளன என்று சீன
-
தெலுங்கானாவில் சோகம்: பண்டிகை கொண்டாட்டத்தில் மின்கம்பி உரசியதில் 9 பேர் பலி
19 Aug 2025ஐதராபாத் : தெலுங்கானாவில் நடைபெற்ற பண்டிகை கொண்டாட்டத்தில் மின்கம்பி உரசியதில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
தமிழகத்தின் நியாயமான கோரிக்கையை மத்திய நிதி அமைச்சர் ஏற்பார் என நம்புகிறேன்: முதல்வர்
19 Aug 2025டெல்லி : தமிழகத்தின் நியாயமான கோரிக்கையை மத்திய நிதி அமைச்சர் நீர்மலா சீதாராமன் ஏற்பார் என நம்புவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
-
நமக்கு நாமே திட்டம்: அரசுக்கு ஓ.பி.எஸ்.கேள்வி
19 Aug 2025சென்னை, நமக்கு நாமே திட்டம் மூடுவிழாவை நோக்கிப் பயணம் செய்கிறது தி.மு.க. அரசு என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
-
பழனியில் ரோப் கார் சேவை மீண்டும் தொடக்கம்
19 Aug 2025திண்டுக்கல், பழனியில் மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-08-2025.
20 Aug 2025 -
கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு: காவிரி கரையோர மக்களுக்கு 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை
19 Aug 2025மைசூரு : கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறப்பு அதிகரிப்பால் காவிரி கரையோர மக்களுக்கு 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
பஸ் நிறுத்தத்தில் வாக்குவாதம்: மாமியார் கை விரலை கடித்து துப்பிய மருமகன்
19 Aug 2025நெல்லை, பஸ் நிறுத்தத்தில் வாக்குவாதம் காரணமாக மாமியார் கை விரலை கடித்து துப்பிய மருமகனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
3 நாள் பயணமாக ரஷ்யா செல்கிறார் ஜெய்சங்கர்
19 Aug 2025புதுடெல்லி, ரஷ்யா செல்கிறார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.
-
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் உயர்வு
19 Aug 2025நெல்லை, மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழையால் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது.
-
தூய்மைப் பணியாளர்கள் விவகாரம்: அரசுக்கு டி.டி.வி.தினகரன் கோரிக்கை
19 Aug 2025சென்னை : தூய்மைப் பணியாளர்களை கோரிக்கையை நிறைவேற்ற தி.மு.க. அரசு முன்வர வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
-
இன்னும் ரூ.6,017 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பி வரவில்லை..? மத்திய அரசு
19 Aug 2025புதுடெல்லி, 1.69 சதவீதம் ரூ.2,000 நோட்டுகள் மட்டும் இன்னும் ரிசர்வ் வங்கிக்கு திரும்பவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.