முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோசடி வழக்கில் டிரம்புக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து: அமெரிக்க உச்சநீதிமன்றம்

வெள்ளிக்கிழமை, 22 ஆகஸ்ட் 2025      உலகம்
Trump 2023-04-13

அமெரிக்கா, மோசடி வழக்கில் டிரம்புக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து செய்து அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

டிரம்ப் நிறுவனம் மற்றும் அதன் சொத்துக்களின் மதிப்பை உயர்த்தி காட்டி வங்கிக் கடன்கள் மற்றும் காப்பீட்டு ஒப்பந்தங்களைப் பெற்றதாக நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் 2022 இல் மோசடி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 2024 இல் அவருக்கு 500 மில்லியன் டாலர் அபராதம்விதிக்கப்பட்டது.

இதற்கிடையே கடந்த வருட இறுதியில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று டிரம்ப் அமெரிக்க அதிபரானார். இந்நிலையில் அதிபர் டிரம்ப் 500 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட மேல்முறையீட்டு அதிகாரசபை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. முந்தைய உத்தரவில் அபராதம் அதிகமாக விதிக்கப்பட்டது என்றும், அமெரிக்க அரசியலமைப்பின் எட்டாவது திருத்தத்தை மீறியது என்றும் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் தனது வணிகத்தை முற்றிலுமாக பாதித்த உத்தரவை ரத்து செய்ய துணிச்சலுடன் செயல்பட்டதற்காக நீதிமன்றத்தை மதிப்பதாக டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் மனமுவந்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து