எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : கோவில்களில் வரவு செலவு கணக்குகளை அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
சென்னை ஐகோர்ட்டில், மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு கோவில்களின் (ஆயிரம் ரூபாய் மேல் வருமானம் இருந்தால்) வரவு-செலவு கணக்கை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஆண்டுதோறும் வெளியிட வேண்டும். ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கோவில்களின் வரவு-செலவு கணக்கை வெளியிடவில்லை.
இதற்கிடையில், கோவில்களின் வரவு-செலவு கணக்கை தணிக்கை செய்யும் பொறுப்பை தமிழ்நாடு நிதித்துறை வசம் ஒப்படைத்து கடந்த 2021-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்காக கோவிலின் மொத்த வருமானத்தில், 4 சதவீதம் தணிக்கை கட்டணமாக வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
1986-ம் ஆண்டு முதல் கோவில்களின் வரவு-செலவு கணக்கில் சுமார் 10 லட்சத்து 80 ஆயிரம் ஆட்சேபனை கேள்விகள் தணிக்கையாளர்களால் கேட்டப்பட்டு, இதுவரை தீர்வு காணப்படாமல் உள்ளன. அதாவது, 1,549 கோடி ரூபாய் அளவுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை.
அதுமட்டுமல்ல அறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகளுக்கு கார், ஜீப் வாங்குதல், அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் கழிவறை கட்டுதல், லாரி மூலம் தண்ணீர் வாங்குதல், துறை சார்ந்த கூட்டங்களுக்கு டீ, காபி, சாப்பாடு, தண்ணீர் பாட்டில் வாங்குதல் போன்ற செலவுகளை கோவில்களின் வருமானத்தில் இருந்து செய்கின்றனர்.
ஒரு கோவிலின் பக்தர், நன்கொடையாளர் ஆகியோருக்கு அந்த கோவிலின் வரவு-செலவுகளை தெரிந்துக் கொள்ள உரிமை உள்ளது.
எனவே, அனைத்து கோவில்களின் வரவு-செலவு கணக்கையும் அறநிலையத்துறை இணையதளத்தில் பி.டி.எப். வடிவில் வெளியிட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சௌந்தர் ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவில் வரவு செலவு கணக்கை வெளியிடாததற்காக அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர், “தமிழ்நாட்டில் சுமார் 9 ஆயிரத்து 500 கோவில்களுக்கு வருமானம் இல்லை என்று அறநிலையத்துறை தரப்பில் கூறப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் இணை கமிஷனர் நிர்வாகத்தின் கீழ் 11 கோவில்களும், துணை கமிஷனர் நிர்வாகத்தின் கீழ் 9 கோவில்களும், உதவி கமிஷனர் நிர்வாகத்தின் கீழ் 30 கோவில்களும் உள்ளன. அதிக வருமானத்தை தரும் பழனி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட இந்த 50 கோவில்களின் வரவு-செலவு கணக்கையாவது வெளியிட்டு இருக்கவேண்டும்.
தணிக்கையில் சுமார் 10 லட்சத்து 80 ஆயிரம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறுவது தீவிர குற்றச்சாட்டாகும். இத்தனைக்கும் அனைத்து கோவில் வரவு-செலவு கணக்கை வெளியிட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை கமிஷனர் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி சுற்றறிக்கை அனுப்பி உத்தரவிட்டு உள்ளார். அதன்பின்னரும் இதுவரை கணக்கை வெளியிடவில்லை'' என்று நீதிபதிகள் கூறினர்.
இதுகுறித்து 2 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்வதாக அறநிலையத்துறை சிறப்பு அரசு பிளீடர் என்.ஆர்.ஆர்.அருண்நடராஜன் கூறினார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அறநிலையத்துறை கமிஷனர் 2024-ம் ஆண்டு பிறப்பித்த சுற்றறிக்கை உத்தரவின்படி, எத்தனை கோவில் செயல் அலுவலர்கள் தங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில் வரவு-செலவு கணக்கை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர்? என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். அதிக வருமானம் தரக்கூடிய பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட 50 கோவில்களின் வரவு-செலவு கணக்கு விவரங்களை முதலில் அறநிலையத்துறை மற்றும் கோவில் இணையதளத்தில் ஒரு மாதத்துக்குள் வெளியிட வேண்டும். சுமார் 9,500 கோவில்களின் வரவு-செலவு கணக்கு இதுவரை தணிக்கை செய்யாமல் உள்ளன. இதுகுறித்து விளக்கம் அளிக்க, இந்த வழக்கில் அறநிலையத்துறை தணிக்கை இயக்குநரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கிறோம். விசாரணையை வருகிற செப்டம்பர் 18-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
வெளிமாநில தமிழ்ச் சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு பாடநூல்கள் தொடர்ந்து இலவசம்
22 Aug 2025புதுடெல்லி : வெளிமாநில தமிழ்ச் சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு பாடநூல்கள் தொடர்ந்து இலவசம் என்று அறிவிப்பு.
-
இனி சிறையிலிருந்து யாரும் ஆட்சி செய்ய முடியாது: பிரதமர் மோடி பேச்சு
22 Aug 2025பாட்னா : இனி சிறையிலிருந்து யாரும் ஆட்சி செய்ய முடியாது என்று பிரதமர் மோடி மக்களவையில் பேசினார்.
-
கருணை அடிப்படையிலான பணி, விதிமுறை திருத்தம் - அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
22 Aug 2025சென்னை : கருணை அடிப்படையிலான பணி விதிமுறை திருத்த அரசாணையை வெளிட்டது தமிழக அரசு.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-08-2025.
22 Aug 2025 -
இந்தியாவுக்கு சவால் அளிக்கும் - பாசித் அலி
22 Aug 2025கராச்சி : இந்தியாவுக்கு பாசித் அலி சவால் அளித்துள்ளார்.
-
டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
22 Aug 2025புதுடெல்லி : டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை என தனது முந்தைய உத்தரவில் இருந்த கெடுபிடிகள் சிலவற்றை தளர்த்தி புதிய உத்தரவை பிற
-
பழனியில் ரூ.1.22 கோடி செலவில் பஞ்சாமிர்த விற்பனை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
22 Aug 2025பழநி : பழனியில் பஞ்சாமிர்த விற்பனை நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
-
முதல்வரை விமர்சித்த விஜய்யின் தராதரம் அவ்வளவு தான் - அமைச்சர் காட்டம்
22 Aug 2025திருச்சி : முதல்வரை விமர்சித்த விஜய்யின் தராதரம் அவ்வளவு தான் என அமைச்சர் கே.என் நேரு காட்டமாக பேசினார்.
-
சட்டசபை தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியா? பிரேமலதா விஜயகாந்த் பதில்
22 Aug 2025விருத்தாசலம் : சட்டசபை தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுவதாக பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
-
ஆன்லைன் கேமிங் மசோதாவால் ரூ.4,500 கோடி வருவாய் இழப்பு
22 Aug 2025டெல்லி, ஆன்லைன் கேமிங் மசோதாவால் ரூ.4,500 கோடி வரை இழப்பு தகவல் வெளியாகியுள்ளது.
-
இந்தியா மீதான வரிவிதிப்பு அடுத்த வாரம் அமல்: ட்ரம்ப்பின் வர்த்தக ஆலோசகர் உறுதி
22 Aug 2025வாஷிங்டன் : இந்தியா மீதான வரிவிதிப்பு அடுத்த வாரம் திட்டமிட்டபடி அமலுக்கு வரும் எனறு ட்ரம்ப்பின் வர்த்தக ஆலோசகர் உறுதிபட தெரிவித்தார்.
-
த.வெ.க. மாநாட்டிற்கு இடையூறு? சல்லித்தனமான வேலைகளை தி.மு.க. செய்யாது- அமைச்சர் மூர்த்தி
22 Aug 2025மதுரை, த.வெ.க. மாநாட்டிற்கு இடையூறு? சல்லித்தனமான வேலைகளை தி.மு.க. செய்யாது என்று அமைச்சர் மூர்த்தி பேசினார்.
-
3 நாட்கள் தொடர் பிரசாரம்: எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சி வருகை
22 Aug 2025திருச்சி : 3 நாட்கள் தொடர் பிரசாரத்திற் எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சி வருகிறார்.
-
நெல்லையில் பா.ஜ.க. பூத் கமிட்டி மண்டல மாநாடு: அமித்ஷா பங்கேற்பு
22 Aug 2025திருநெல்வேலி : நெல்லையில் பா.ஜ.க. பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் கலந்து கொள்ள அமித் ஷா பங்கேற்றார்.
-
தங்கம், வெள்ளி விலை நிலவரம்
22 Aug 2025சென்னை : தங்கம், வெள்ளி விலை நிலவரம்.
-
ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி விழாவுக்கு தலைமை தாங்குகிறார் ராம்நாத் கோவிந்த்
22 Aug 2025நாக்பூர் : ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி விழாவுக்கு தலைமை தாங்குகிறார் ராம்நாத் கோவிந்தன்.
-
புதுவையில் கலைஞர் அறிவாலயம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்
22 Aug 2025புதுச்சேரி : புதுச்சேரியில் கிழக்கு கடற்கரைச் சாலையில் கலைஞர் அறிவாலயம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.
-
ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் விண்வெளி வீரர் சுக்லா சந்திப்பு
22 Aug 2025டெல்லி : ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் விண்வெளி வீரர் சுக்லா சந்தித்து பேசினார்.
-
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைவு
22 Aug 2025சேலம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது.
-
அமெரிக்கருக்கு ரூ.19 லட்சம் பைக்கை பரிசளித்த அதிபர் புதின்
22 Aug 2025வாஷிங்டன், அமெரிக்கருக்கு ரூ.19 லட்சம் பைக்கை அதிபர் புதின் பரிசளித்தார்.
-
உங்கள் பவுலிங்கில் கேட்சை விட்ட போதே ஓய்வு எண்ணம் வந்தது
22 Aug 2025டெல்லி, : உங்கள் பவுலிங்கில் கேட்சை விட்டபோதே ஓய்வு எண்ணம் வந்ததாக ராகுல் திராவிட் பேசினார்.
-
இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தமிழகம் வருகை
22 Aug 2025டெல்லி, இந்தியா கூட்டணி குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி இன்று தமிழகம் வரவிருக்கிறார்.
-
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய திட்டப் பணிகள்- முதல்வர் தொடங்கி வைத்தார்
22 Aug 2025சென்னை : இநது சமய அறநிலையததுறை சார்பில் புதிய திட்ட பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.
-
சென்னையை வாழத்தகுந்த மாநகரமாக மாற்ற உறுதியேற்போம் - அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
22 Aug 2025சென்னை, சென்னையை வாழத்தகுந்த மாநகரமாக மாற்ற உறுதியேற்போம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
திருச்செந்தூர் கோவிலில் ஆவணித் திருவிழா: பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி வீதி உலா
22 Aug 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோவிலில் ஆவணித் திருவிழாவில் பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.