எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பாலஸ்தீனம் : காசாவில் கொடும் பஞ்சம் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஐ.நா.
காசாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட கொடும் பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அதன் அறிக்கையின்படி, காசாவில் அரை மில்லியனுக்கும் (5 லட்சத்துக்கும்) அதிகமான மக்கள் கடுமையான பசியை எதிர்கொள்கின்றனர். காசா நகரம் உட்பட பாலஸ்தீனத்தின் சுமார் 20 சதவீத பகுதியில் பஞ்ச நிலைமை இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
உடனடி போர்நிறுத்தம் செயல்படுத்தப்பட்டு, மனிதாபிமான உதவி கிடைக்காவிட்டால், கான் யூனிஸ் மற்றும் டெய்ர் அல்-பாலா போன்ற தெற்குப் பகுதிகளுக்கு பஞ்சம் பரவக்கூடும். பல்லாயிரக்கணக்கானோர் பட்டினியின் விளிம்பில் உள்ளனர். காசாவில் பசி பட்டினி முற்றிலும் மனிதனால் உருவாக்கப்பட்டது. பசி பட்டினி அங்கு வேகமாக பரவி வருகிறது.
உதவி கிடைப்பதில் ஒரு நாள் தாமதம் கூட பட்டினி மரணங்களை அதிகரிக்கச் செய்கிறது. தடுக்கக்கூடிய இறப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்று அறிக்கை எச்சரிக்கிறது. மத்திய கிழக்கு வரலாற்றில் ஒரு பகுதியில் பஞ்சம் அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.
ஜெனீவாவில் நடந்த கூட்டத்தில் பேசிய ஐ.நா. உதவி பொதுச்செயலாளர் டாம் பிளெட்சர், இது முற்றிலும் தடுக்கக்கூடிய பஞ்சம்.எல்லைகளில் உணவு விநியோகத்தை நிறுத்தும் தடைகளை இஸ்ரேல் திட்டமிட்டு உருவாக்குகிறது. இது நம் அனைவரையும் வேட்டையாடும் பஞ்சம்" என்று கூறினார்.
காசாவின் பஞ்சம் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்றும் இது மனிதகுலத்தின் தோல்வி" என்றும் ஐநா பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்ரஸ் தெரிவித்தார். பசியை போர் ஆயுதமாகப் பயன்படுத்துவது ஒரு போர்க்குற்றம் என்று ஐ.நா மனித உரிமைகள் அதிகாரி வோல்கர் டர்க் கூறினார்.
மறுபுறம், இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் ஐ.நா அறிக்கையை கடுமையாகக் கண்டித்தது. "காசாவில் பஞ்சம் இல்லை. இந்த அறிக்கை ஹமாஸால் கூறப்பட்ட பொய்களை அடிப்படையாகக் கொண்டது" என்று அது குற்றம் சாட்டியது.
ஒரு பகுதியில் பஞ்சத்தை அறிவிக்க, ஐ.பி.சி சில கடுமையான அளவுகோல்களைப் பின்பற்றுகிறது. இந்த அளவுகோல்களில் முக்கியமானது, மக்கள்தொகையில் குறைந்தது 20 சதவீத வீடுகளாவது கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வது, 30 சதவீத குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவது, ஒவ்வொரு 10,000 பேரில் இரண்டு பெரியவர்கள் அல்லது நான்கு குழந்தைகள் பசியால் உயிரிழப்பது ஆகும். காசாவில் இந்த நிலைமைகள் இருப்பதாக தீர்மானித்துள்ளது. காசாவில் கடந்த ஓரிரு மாதங்களில் பட்டினியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 4 weeks ago |
-
தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கும் விவகாரம்: நயினார் நாகேந்திரன்
23 Aug 2025சென்னை : தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
-
சென்னையில் தயாரிக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் ரெயில் டெல்லிக்கு புறப்பட்டது
23 Aug 2025சென்னை : சென்னையில் தயாரிக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் ரெயில் டெல்லிக்கு புறப்பட்டது.
-
கொலம்பியாவில் லாரி வெடிகுண்டு, ஹெலிகாப்டர் வெடித்து 17 பேர் உயிரிழந்தனர்
23 Aug 2025காலி : கொலம்பியாவில் லாரி வெடிகுண்டு, ஹெலிகாப்டர் வெடித்து 17 பேர் பலி
-
வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் : கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்
23 Aug 2025ராமேசுவரம் : வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் எதிரொலியாக 12 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்.
-
ஆஸ்திரேலியா பந்துவீச்சை பார்த்து கற்றுக்கொண்டேன்: லுங்கி இங்கிடி
23 Aug 2025டெல்லி : ஆஸ்திரேலியா பந்துவீச்சை பார்த்து கற்றுக்கொண்டேன் என்று லுங்கி இங்கிடி கூறினார்.
-
வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்
23 Aug 2025சென்னை : வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
-
விநாயகர் சிலை ரூ.474 கோடிக்கு காப்பீடு
23 Aug 2025மும்பை : மும்பையில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை ரூ.474 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
-
காசாவில் பஞ்சம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஐ.நா.
23 Aug 2025பாலஸ்தீனம் : காசாவில் கொடும் பஞ்சம் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஐ.நா.
-
ஆன்மிக பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம் : அமைச்சர் சேகர்பாபு தகவல்
23 Aug 2025சென்னை : வைணவத் கோவில்களுக்கு புரட்டாசு மாதத்தில் கட்டணமில்லா ஆன்மிக பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
-
ரூ.54.40 லட்சம் மதிப்பில் அரசு பள்ளியில் வகுப்பறை கட்ட பூமி பூஜை : விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்
23 Aug 2025கன்னியாகுமரி : அரசு பள்ளியில் வகுப்பறை கட்ட ரூ.54.40 லட்சம் மதிப்பில் பூமி பூஜையை விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.
-
அமெரிக்காவில் விபத்து: 5 இந்தியர்கள் காயம்
23 Aug 2025நியூயார்க் : அமெரிக்காவில் சுற்றுலா பஸ் விபத்தில் சிக்கியதில் 5 இந்தியர்கள் உள்பட 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேரள பயணம் உறுதி
23 Aug 2025சென்னை : எதிர்வரும் நவம்பர் மாதம் கேரளா மாநிலத்தில் நட்பு ரீதியிலான போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி விளையாடுவது உறுதி ஆகியுள்ளது.
-
விராட், ரோகித்தை பி.சி.சி.ஐ. ஓய்வு பெற வைக்கிறதா? சுக்லா விளக்கம்
23 Aug 2025டெல்லி : விராட், ரோகித்தை பி.சி.சி.ஐ. ஓய்வு பெற வைக்கிறதா என்று சுக்லா விளக்கம் அளித்துள்ளார்.
-
மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசுக்கு கர்நாடக கோரிக்கை
23 Aug 2025பெங்களூரு : மேகதாது அணை விவகாரத்துக்கு தமிழக அரசுக்கு கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
-
கர்நாடகாவில் கனமழை
23 Aug 2025பெங்களூரு : கர்நாடகாவில் 28 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
காசா மக்களுக்கு நிதி திரட்டுவதாக கூறி ஆடம்பர வாழ்க்கை; சிரியாவை சேர்ந்தவர் கைது
23 Aug 2025காந்திநகர் : காசா மக்களுக்கு நிதி திரட்டுவதாக கூறி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த சிரியாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
-
விஜய்க்கு பா.ஜ.க. வேண்டுகோள்
23 Aug 2025சென்னை : மக்கள் நல அரசியல்வாதியாக விஜய் மாற வேண்டும்: பா.ஜ.க. வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
மருத்துவ துறையில் 6 ஆயிரம் பணியிடங்கள்: தொகுப்பூதித்தில் நிரப்ப செவிலியர்கள் எதிர்ப்பு
23 Aug 2025கும்பகோணம் : நோய் தடுப்பு மருந்து துறையில் 6 ஆயிரம் செவிலியர்கள் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
டி20 கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் வீரர் இம்ரான் தாஹிர் புதிய சாதனை
23 Aug 2025ஆன்டிகுவா : டி20 கிரிக்கெட்: 46 வயதில் 5 விக்கெட் போட்டியில் உலக சாதனை படைத்தார் இம்ரான் தாஹிர்.
-
துலீப் டிராபி தொடரை தவறவிடும் சுப்மன் கில்
23 Aug 2025மும்பை : துலீப் டிராபி தொடரை சுப்மன் கில் தவறவிட்டார்.
-
கடைசி ஒருநாள் போட்டி: ஆஸி. - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்
23 Aug 2025மெக்காய் : கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது.
-
முகமது சிராஜை வாங்க முடியாமல் போக காரணம் - விளக்கம் அளித்த ஆர்.சி.பி.
23 Aug 2025பெங்களூரு : முகமது சிராஜை வாங்க முடியாமல் போக காரணம் என்ன என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது ஆர்.சி.பி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-08-2025.
24 Aug 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-08-2025.
24 Aug 2025 -
உலக தடகள போட்டிக்கு அனிமேஷ் குஜுர் தகுதி
24 Aug 2025சென்னை : உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு அனிமேஷ் குஜுர் தகுதி பெற்றார்.