முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எவ்வளவு நெருக்கடி வந்தாலும் நம் விவசாயிகளை நிச்சயம் காப்பேன்: பிரதமர் உறுதி

புதன்கிழமை, 27 ஆகஸ்ட் 2025      இந்தியா
mODI 2023-05-25

Source: provided

புதுடெல்லி : ​நாட்​டில் உள்ள சிறு நிறு​வனங்​கள், விவ​சா​யிகளை பாது​காக்​கும் விஷ​யத்​தில் எவ்​வளவு நெருக்​கடிகள் வந்​தா​லும் கவலை​யில்​லை’’ என்று பிரதமர் நரேந்​திர மோடி உறு​தி​யாக தெரி​வித்​தார். 

உலக நாடு​களுக்கு அதி​கபட்ச வரி விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்​தி​யா​வுக்கு 25 சதவீத வரியை விதித்​தார். உக்​ரைன் மீது போர் தொடுத்​துள்ள ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால், இந்​தி​யா​வுக்கு கூடு​தலாக 25% வரியை அறி​வித்​தார்.

இதற்​கான உத்​தர​வில் ட்ரம்ப் கையெழுத்​திட்​டார். இதையடுத்து அமெரிக்கா​வுக்கு இந்​தி​யா​வில் இருந்து ஏற்​றுமதி செய்​யப்​படும் பொருட்​களுக்கு மொத்​த​மாக 50 சதவீத வரி விதிக்​கப்​படும். இந்த நடை​முறை நேற்று அமலுக்கு வந்தது. 

இந்​நிலை​யில், குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில்  நடை​பெற்ற பேரணி மற்​றும் பொதுக் கூட்​டத்​தில் பிரதமர் மோடி பங்​கேற்​றார். அப்​போது பிரதமர் மோடி பேசி​ய​தாவது: உலகள​வில் தற்​போது பொருளா​தார ரீதி​யாக அரசி​யல் செய்​வ​தில் ஒவ்​வொரு​வரும் பரபரப்​பாக இருக்​கின்​றனர். ஆனால்​,அகம​தா​பாத் மண்​ணில் இருந்து ஒன்று சொல்​கிறேன். மகாத்மா காந்​தி​யின் மண்​ணில் இருந்து ஒன்று சொல்​கிறேன்.

என்​னுடைய சிறு நிறு​வனங்​களைச் சேர்ந்த சகோ​தர, சகோ​தரி​கள், சிறிய கடை வைத்​துள்ள சகோ​தர, சகோ​தரி​கள், சிறு விவ​சாய சகோ​தர, சகோ​தரி​கள் யாராக இருந்​தா​லும், அவர்​களுக்கு மீண்​டும் மீண்​டும் உறுதி அளிக்​கிறேன். உங்​களு​டைய நலன், உணர்​வு​கள்​தான் இந்த மோடிக்கு முதன்​மை​யானது.

எனது நாட்​டில் சிறு நிறு​வனங்​கள் வைத்​திருப்​பவர்​கள், விவ​சா​யிகளைப் பாது​காப்​ப​தில் உறு​தி​யாக இருக்​கிறேன். அதற்கு தடை​யாக எத்​தனை நெருக்​கடி வந்​தா​லும், அவர்​களின் வாழ்​வா​தா​ரத்தை விட்​டுத்தர மாட்​டேன். அவர்​களுக்கு சிறு கஷ்டம் வரு​வதை என்​னுடைய தலை​மையி​லான அரசு பொறுத்​துக் கொள்​ளாது. எத்​தனை நெருக்​கடி வந்​தா​லும், அவற்றை தாங்​கும் வலிமையை அதி​கரித்து கொண்டே இருப்​போம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து