முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் தாக்குதல் நடத்த திட்டம்? உளவு தகவல்

வியாழக்கிழமை, 28 ஆகஸ்ட் 2025      இந்தியா
Central-government 2021 12-

பாட்னா, பீகாரில் பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக உளவு துறை தகவல் வெளியீடுள்ளது.

பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் பீகாரில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியுள்ளனர் என அந்த மாநிலத்தின் காவல் தலைமையகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.

இதன்படி, தடை செய்யப்பட்ட அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத இயக்க உறுப்பினர்களான ராவல்பிண்டி நகரை சேர்ந்த ஹஸ்னைன் அலி, உமர்கோட் பகுதியை சேர்ந்த அடில் உசைன் மற்றும் பஹவல்பூரை சேர்ந்த முகமது உஸ்மான் ஆகிய 3 பேரை அடையாளம் கண்டுள்ளது. அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் வரைபட விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை அனைத்து மாவட்ட காவல் தலைமைக்கும் பகிர்ந்து உள்ளது. இதுபற்றி வெளியான தகவலில், அவர்கள் 3 பேரும் நேபாள நாட்டின் வழியே பீகாருக்குள் ஊடுருவி உள்ளனர். பீகார் மற்றும் நாடு முழுவதும் அவர்கள் பெரிய அளவில் தாக்குதலை நடத்த திட்டமிட்டு உள்ளனர் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, பூர்னியா, கதிஹார், அராரியா மற்றும் கிஷன்கஞ்ச் என நேபாளம் மற்றும் வங்காளதேச நாடுகளுடன் எல்லையை பகிர கூடிய மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அவர்கள் 3 பேரும் ஆகஸ்டு 2-ம் வாரத்தில் காத்மண்டு நகருக்கு வந்து பின்னர், கடந்த வாரம் அராரியா வழியே பீகாருக்குள் நுழைந்துள்ளனர். பீகாரில், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள், வாக்காளர் அதிகார யாத்திரை என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்திற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 17-ந்தேதி தொடங்கிய இந்த யாத்திரை 20 மாவட்டங்களை உள்ளடக்கி இருக்கும். 1,300 கி.மீ. தொலைவை கடந்து செல்லும் இந்த யாத்திரை 16 நாட்கள் நடைபெறும். இந்த சூழலில், பாகிஸ்தானிய பயங்கரவாதிகளின் ஊடுருவல் பற்றிய உளவு தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து