முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முக்கிய கனிமங்கள் மறுசுழற்சிக்கு ரூ.1,500 கோடி ஊக்கத்தொகை திட்டம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வியாழக்கிழமை, 4 செப்டம்பர் 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி: கனிமங்கள் மறுசுழற்சிக்கு ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில், முக்கிய கனிமங்களின் மறுசுழற்சியை ஊக்குவிப்பதற்காக ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு ரூ.1,500 கோடி ஒதுக்கப்படும். இத்தகவலை மத்திய சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. மூலப்பொருட்களில் இருந்து முக்கியமான கனிமங்களை பிரித்தெடுக்கவும், தயாரிக்கவும் மறுசுழற்சி திறனை மேம்படுத்துவதுதான் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். மின்னணு கழிவுகள், லித்தியம் அயன் பேட்டரி கழிவுகள், இதர கழிவுகள் ஆகியவற்றில் இருந்து முக்கிய கனிமங்கள் பிரித்தெடுக்கப்படும்.

இந்த திட்டம், தேசிய முக்கிய கனிமங்கள் திட்டத்தின் ஒரு அங்கம் ஆகும். ரூ.34 ஆயிரம் கோடி செலவிலான அத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்து விட்டது. பசுமை எரிசக்தி பயன்பாட்டை நோக்கிய இந்தியாவின் பயணத்தை விரைவுபடுத்துவதும், தற்சார்பு நிலையை அடைவதும் தேசிய முக்கிய கனிமங்கள் திட்டத்தின் நோக்கங்கள் ஆகும்.

தாமிரம், லித்தியம், நிக்கல், கோபால்ட் மற்றும் அரியவகை புவி பொருட்கள் ஆகியவை இதற்கு தேவையான மூலப்பொருட்கள். அகழாய்வை அதிகரித்தல், இறக்குமதியை நம்பி இருப்பதை குறைத்தல், வெளிநாடுகளில் கனிம படுகைகளை வாங்குதல், முக்கிய கனிமங்கள் மறுசுழற்சிக்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து