முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியா: படகு கவிழ்ந்து 60 பேர் பலி

வியாழக்கிழமை, 4 செப்டம்பர் 2025      உலகம்
Boot 2024 07 22

Source: provided

நைஜர்: நைஜீரியா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 60 பேர் உயிரிழந்தனர்.

நைஜீரியா நாட்டில் படகு போக்குவரத்து பிரதானமாக இருந்து வருகிறது. இருந்த போதிலும் மழைக்காலங்களில் அடிக்கடி படகு விபத்துகளும் அதிகமாக நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது. நேற்று முன்தினம் வடமத்திய நைஜர் மாநிலம் மலாலே மாவட்டம் துங்கன் கலேவில் இருந்து துக்காவுனக்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு படகில் மலேலே ஆற்றில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அந்த படகு ஆற்றில் கவிழ்ந்தது. இதனால் படகில் பயணம் செய்தவர்கள் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர். பலர் ஆற்றில் மூழ்கினார்கள். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று ஆற்றில் தத்தளித்துக்கொண்டிருந்த 15-க்கும் மேற்பட்டவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இந்த விபத்தில் 60 பேர் ஆற்றில் மூழ்கி உயிர் இழந்தனர். இன்னும் சிலரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இது வரை பலியான 31 பேர் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. விபத்துக்குள்ளான காரணம் என்னவென்று தெரியவில்லை. அதிக பாரம் தாங்காமலும், ஆற்றில் இருந்த மரத்தின் அடிப்பகுதியில் படகு மோதியதாலும் இந்த விபத்து நடந்து இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து