முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் இல்ல திருமண வரவேற்பு விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சனிக்கிழமை, 27 செப்டம்பர் 2025      தமிழகம்
CM-VIT-2025-09-27

சென்னை, வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதனின் பேத்தி திருமண வரவேற்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.விசுவநாதனின் பேத்தியும், பல்கலைக்கழகத்தின் துணை தலைவர் சங்கர் விசுவநாதன்- ரமணி பாலசுந்தரம் தம்பதியர் மகளும், உதவி துணை தலைவருமான காதம்பரி, டாக்டர் ஏ.கோவிந்த ரெட்டி- பி.மாலினி தம்பதியர் மகன் டாக்டர் அ.ஷரவன் கிருஷ்ணா ஆகியோரின் திருமண வரவேற்பு விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது.

விழாவில் மணமக்களுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மரக்கன்று பசுமைக் கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, எம்.பி.க்கள் எஸ். ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன் ஆகியோரும் வாழ்த்தினார்கள். அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி உள்ளிட்டோரும் தனியாக வந்து வாழ்த்தினார்கள். திருமண வரவேற்பு விழாவுக்கு வருகை தந்தவர்களை வி.ஜ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன், துணை தலைவர் ஜி.வி.செல்வம் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து