முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உணவுப் பாதுகாப்பு காவலர் எம்.எஸ். சுவாமிநாதன்: நூற்றாண்டு நினைவஞ்சலி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

சனிக்கிழமை, 27 செப்டம்பர் 2025      தமிழகம்
CM-1-2025-09-27

சென்னை, பல கோடி பேரின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்றும், உணவுப் பாதுகாப்பு காவலர் என்றும் எம்.எஸ். சுவாமிநாதன்  நூற்றாண்டு நினைவஞ்சலி விழாவில் அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

சென்னையில் நேற்று காலை நடைபெற்ற பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி விழாவில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், தான் கொண்ட அறிவை, தான் கற்ற அறிவியலை மக்கள் பசிபோக்க பயன்படுத்திய சிந்தனையாளர் எம்.எஸ். சுவாமிநாதன். இன்று உலகமே பேசிக் கொண்டிருக்கும் காலநிலை மாற்றம் குறித்து 50 ஆண்டுகளுக்கு முன்பே எம்.எஸ். சுவாமிநாதன் பேசியிருக்கிறார்.

 மிக எளிமையான வாழ்வை வாழ்ந்தவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன். பலமுறை எம்.எஸ்.சுவாமிநாதனை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நாட்டில் பெரும்பாலான மக்கள் பட்டினியில் வாடியபோது மக்களின் வயிறு நிறைய மாபெரும் புரட்சி செய்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன். உணவு பாதுகாப்பின் காவலராகவும், குரலற்றவர்களின் குரலாக இருந்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன். வறுமை ஒழிப்பை தனது குறிக்கோளாக கொண்டு செயல்பட்டவர் எம்.எஸ்.சுவாமிநாதன். 

மக்களின் வயிறு நிறைய மாபெரும் புரட்சி நடத்திய எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை இந்தியா என்றும் மறக்காது. இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என உலகமே அழைத்தாலும் நமக்கு அவர் உணவுப் பாதுகாப்பின் காவலராகவும், குரலற்றவர்களின் குரலாகவும் எளிமையுன் உருவமாகவும் இருந்தார். சத்தான, மக்கள் தொகைக்கான தேவையை தீர்க்கும் ஆற்றல் உள்ள பயிரை கண்டறியவே தனது வாழ்நாளை அர்ப்பணித்தார் என்று புகழாரம் சூட்டினார்.

இங்குள்ள அறிவியலாளர்களும் அவருடைய ஆராய்ச்சி அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களும் இருக்கிறீர்கள். அவருடைய கனவுகளை நனவாக்கும் பணிகளை நீங்கள் எல்லோரும் தொடர்ந்து செய்ய வேண்டும். மண்ணுயிர் காக்கும் எங்களது முயற்சிக்கு அறிவியலாளர்கள் துணை நிற்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து