முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடகங்கள் உண்மைகளை மறைக்க உதவாது: ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

சனிக்கிழமை, 27 செப்டம்பர் 2025      இந்தியா
UN-India 2024-03-16

Source: provided

புதுதில்லி : எந்த நாடகமும் உண்மைகளை மறைக்க உதவாது என்று ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

எந்த நாடகமும் உண்மைகளை மறைக்க உதவாது என்று ஐ.நா. அவையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிஃப் கூறிய கூற்றுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தனது கடுமையான கருத்துகளை முன்வைத்திருந்தது. ஐ.நா. அவையில் சனிக்கிழமை உரையாற்றிய இந்திய தூதர் பெடல் கஹ்லோட், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.

இந்த ஐக்கிய நாடுகள் அவை, காலையில் பாகிஸ்தான் பிரதமரின் நாடகத் தன்மையான உரையைக் கேட்டது, அவர்தான், பாகிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு மெருகேற்றி வருகிறார். அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கையே அதுதானே என்றும் கஹ்லோட் காட்டமாகப் பேசியுள்ளார். பாகிஸ்தான் பிரதமரின் பேச்சு அபத்தமான நாடகத்தன்மையுடன் இருந்ததாகக் குறிப்பிட்ட பெடல், எந்த ஒரு நாடகமும், உண்மையை மறைத்துவிடாது என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

பஹல்காம் தாக்குதல் குறித்து கெஹ்லாட் பேசுகையில், எந்த ஒரு நாடகமும், எந்த அளவிலான பொய்யும், ஒரு உண்மையை மறைத்துவிடாது. இது, 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இருந்த அதே பாகிஸ்தான்தான். பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பாதுகாக்கும், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கி ஊக்குவிக்கும், அந்த பயங்கரவாதிகள்தான், இந்திய மண்ணில், ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களைக் கொலை செய்தார்கள் என்று பெடல் கஹ்லோட் நேரடியாகவே பாகிஸ்தான் தாக்கிப் பேசியுள்ளார்.

பாகிஸ்தான், நீண்ட காலமக பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பது மற்றும் ஊக்குவித்து, அதன் அதிகபட்ச பயங்கரவாத நடவடிக்கைகளை செய்ய அனைத்து ஆதரவுகளையும் அளித்து வருகிறது. ஒருபக்கம், பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளுடன் கூட்டணி அமைப்பது போல இருந்தாலும், பல ஆண்டுகளாக பயங்கரவாதி ஒசாமா பின் லேடனுக்கு புகலிடம் அளித்திருந்ததை இங்கே நினைவுகூர வேண்டும். பாகிஸ்தான் அமைச்சர்களோ, பல ஆண்டுகாலமாக, தாங்கள்தான் பயங்கரவாத முகாம்களை கண்காணித்து நடத்தி வருகிறோம் என்பதை அண்மையில்தான் ஒப்புக்கொண்டனர்.

இப்போது, அதே பாகிஸ்தான் மீண்டும் ஒரு போலித்தனத்தை, இந்த ஐக்கிய நாடுகள் அவையில் அதன் பிரதமர் மூலம் கொண்டுவந்திருக்கிறது. இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நொ. பொதுச் சபையின் 80-வது அமர்வு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிஃப் வெள்ளிக்கிழமை உரையாற்றிய போது, இந்தியாவுடன் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் முடிவு கிடைக்கும் வகையில் விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது. காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் மக்கள் துணை நிற்கின்றனர். ஐ.நா. ஆதரவுடன் பாரபட்சமில்லாத முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் தனது அடிப்படை உரிமையான சுய நிர்ணய உரிமையை காஷ்மீர் பெறும் என்று கூறியிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து