முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2021-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் புதிதாக ஆண்டுக்கு 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சனிக்கிழமை, 27 செப்டம்பர் 2025      தமிழகம்
Cm 2025-02-20

Source: provided

சென்னை : 2021-ல் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின் ஆண்டுக்கு 12.5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருவதாக பெருமிதம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நமது ஓட்டம் இன்னும் வேகமாகத் தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இ.பி.எப்.ஓ. அறிக்கை...

தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.ஓ.) அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நாட்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் சுமார் 10 சதவீதம் ஆகும். கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து மொத்தமாக 52 லட்சத்திற்கும் அதிகமானோர் இ.பி.எப்.ஓ-வில் பதிவு செய்துள்ளனர் என்றும் கூறியுள்ளது. அதாவது 2021ல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றபிறகு 4 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார். 

அதிக வேலைவாய்ப்பு...

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், தொழில் வளர்ச்சியின் மிகச் சிறந்த குறியீடு வேலைவாய்ப்பை உருவாக்குவதுதான். அந்த வகையில், 2021-ம் ஆண்டு திருச்சியில் நான் உறுதியளித்த அளவான ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் என்பதையும் தாண்டி ஆண்டுக்கு 12.5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது தி.மு.க. அரசு. நமது ஓட்டம் இன்னும் வேகமாகத் தொடரும்" என்று பதிவிட்டுள்ளார். 

மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிக்கையில், ஒட்டுமொத்தமாக நாட்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் சுமார் 10 சதவீதம் ஆகும். கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து மொத்தமாக 52 லட்சத்திற்கும் அதிகமானோர் இ.பி.எப்.ஓ-வில் பதிவு செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. அதாவது 2021ல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றபிறகு 4 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. 

முதல்வர் மு.க.ஸ்டாலின் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து