முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிர் உற்பத்தி திறனில் இந்திய அளவில் முதலிடம்: தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது : வேளாண் வணிகத் திருவிழாவை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சனிக்கிழமை, 27 செப்டம்பர் 2025      தமிழகம்
CM-1 2025-09-27

Source: provided

சென்னை : தமிழ்நாடு கல்வியில் மட்டுமல்ல அனைத்து துறைகளில் சிறந்து விளங்கி வருகிறது என்றும்  வேளாண்மையில் முன்னோடி மாநிலமாகவும், பயிர் உற்பத்தி திறனில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாகவும் சென்னையில் வேளாண் வணிகத் திருவிழாவை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

நலத்திட்ட உதவிகள்....

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்றும், இன்றும் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் திருவிழா நடைபெறுகிறது. வேளாண் வணிகத் திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்ட முதல்வர், உழவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அனைத்து துறைகளில்.... 

வேளாண் வணிகத் திருவிழா உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-  வேளாண்மையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு என்று சொல்லுமளவுக்கான விழா இது. விவசாயிகளுக்கு வேளாண் வணிக வாய்ப்புகளை தெரிந்து கொள்ளும் தளமாக உள்ளது. தமிழ்நாடு கல்வியில் மட்டுமல்ல அனைத்து துறைகளில் சிறந்து விளங்கி வருகிறது. தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் குறித்த நாளில் மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. உழவர்களின் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் திட்டங்களை அறிவிக்கிறோம். 

கூடுதலாக நெல் சாகுபடி.... 

தமிழகத்தில் நெல் உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் 5.66 லட்சம் ஹெக்டேர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட 1 லட்சம் ஹெக்டேர் கூடுதலாக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  ஆக்கப்பூர்வமாக செயல்படுவதால் தான் கடந்த 4 ஆண்டுகளில் 456 மெட்ரிக் டன் லட்சம் உணவு உற்பத்தியை எட்டி உள்ளோம்.  47 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்களை மீண்டும் சாகுபடிக்கு கொண்டு வந்துள்ளோம்.

தமிழ்நாடு முதலிடம்.... 

விவசாயிகளை தேடி சென்று அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க முகாம்கள் நடத்துகிறோம். பயிர் உற்பத்தி திறனில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம். எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தமிழகம் இந்தியாவில் 2-ம் இடத்தில் உள்ளது. வேளாண்மையில் முன்னோடி மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமங்களும் வளர்ச்சி அடைய வேண்டும்.விவசாய பொருட்கள் ஏற்றுமதிக்கான வாய்ப்பு மேலும் அதிகரிக்கும்.  வேளாண் அதிகரிப்பதுடன் உழவர்களின் வாழ்வும் உயர வேண்டும். வேளாண் துறை என்ற பெயரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என மாற்றி அறிவித்தது தி.மு.க. அரசு. உழவர்களின் கருத்து, விருப்பத்தை கேட்டு செயல்படும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து