முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் 100 சதவீத பி.எஸ்.என்.எல். 4ஜி சேவையை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி : கிராமங்கள் பயன்பெறும் என பெருமிதம்

சனிக்கிழமை, 27 செப்டம்பர் 2025      இந்தியா
Modi 2024-09-15

Source: provided

புவனேஸ்வர் : நாடுமுழுவதும் 100 சதவீத மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 4ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடக்கி வைத்தார். இதன் மூலமாக கிராமங்கள் பயன்பெறும் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்திய பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்.) நிறுவனம் ஏற்கெனவே 2.2 கோடி வாடிக்கையாளா்களுக்கு 4ஜி தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் 100% சதவீத 4ஜி சேவையை வழங்கும்பொருட்டு 29,000-30,000 கிராமங்களில் புதிதாக 97,500 கைப்பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒடிசாவில் நேற்று பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, சுதேசி 4ஜி சேவையையும் நேற்று காணொலி வாயிலாக தொடக்கிவைத்தார். இதன்மூலம் உள்நாட்டிலேயே தொலைத்தொடா்பு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபடும் டென்மாா்க், ஸ்வீடன், தென் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் 5-ஆவது நாடாக இந்தியாவும் இணைகிறது.

ஒடிசா ஜார்சுகுடா நிகழ்ச்சியில் இதுகுறித்துப் பேசிய பிரதமர் மோடி, உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு 4ஜி சேவைகளைத் தொடங்கிய உலகின் முதல் 5 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது. பி.எஸ்.என்.எல். மூலமாக இந்தியா உலகளாவிய தொலைதொடர்பு உற்பத்தி மையமாக மாறுகிறது. சுதேசி 4ஜி இணைய சேவை இன்று இங்கிருந்து தொடக்கிவைக்கிறேன். இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1 லட்சம் 4ஜி மொபைல் கோபுரங்கள் பயன்பாட்டுக்கு வருகின்றன. அதிவேக இணையம் பெறாத பகுதிகள், கிராமங்கள் இதன் மூலமாக பயன்பெறும். எல்லையில் உள்ள நமது வீரர்களும் பாதுகாப்பான அதிவேகமான உள்நாட்டு சேவைகளை இனி பயன்படுத்த முடியும்" என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து