முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் தாக்குதலில் காஸா அகதிகள் முகாமில் 38 பேர் பலி

சனிக்கிழமை, 27 செப்டம்பர் 2025      உலகம்
Gaza 2025-07-23

Source: provided

காஸா : காஸா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

காஸா மீது இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்களில் 38 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா மீதான இஸ்ரேலின் போரானது, பாலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலை என நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில், பல்வேறு நாடுகளின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால், உடனடியாகப் போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டு, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் காஸாவினுள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மத்திய மற்றும் வடக்கு காஸாவில் நேற்று  இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்களில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில், நுசைராத் அகதிகள் முகாமில் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரும் கொல்லப்பட்டதாக, அங்கு செயல்படும் சுகாதார அமைப்புகள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. கூட்டத்தில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் அரசுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. இதையடுத்து, ஐ.நா.வின் பொது அவைக் கூடத்தில், நேற்று முன்தினம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையைத் துவங்கியதுடன் சுமார் 50-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் அதிகமான பிரதிநிதிகள் மற்றும் தலைவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இருப்பினும், மீதமிருந்த ஒரு சிலரது முன்னிலையில் பேசிய பிரதமர் நெதன்யாகு, காஸாவில் ஹமாஸுக்கு எதிரான தங்களது வேலைகளை நிச்சயமாக முடித்தாக வேண்டும் எனக் கூறினார். கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் சுமார் 65,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து