முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி : சம்பவம் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்

சனிக்கிழமை, 27 செப்டம்பர் 2025      தமிழகம்
CM-2 2024-11-02

Source: provided

கரூர், : கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 4 குழந்தைகள், 10 பெண்கள் உள்ளிட்ட 31 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து கரூர் மாவட்ட கலெக்டரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் விஜய்யின் பிரசாரம் நேற்று இரவு 7.20 மணியளவில் தொடங்கியது. அப்போது, த.வெ.க. கொடியுடன் ஆம்புலன்ஸ் ஒன்று சென்றது. உடனே, அதற்கு வழி விடும்படி விஜய் கூறினார். அதன்பின்னே மற்றொரு ஆம்புலன்சும் சென்றது. அப்போது, அந்த ஆம்புலன்சின் உட்புறம் முன்பகுதியில், த.வெ.க. கொடி வைக்கப்பட்டு இருந்தது. இதனை கவனித்த விஜய், என்ன ஆம்புலன்ஸ் நம்ம கொடியுடன் போகுது என கூறினார். அ.தி.மு.க. அரசியல் கூட்டத்தின் இடையேயும் இதுபோன்று ஆம்புலன்ஸ் சென்று அது சர்ச்சையானது. ஆம்புலன்ஸ் செல்ல கூடிய இடத்தில் பிரசார அனுமதி கொடுத்ததும் மறுபுறம் சர்ச்சையானது.

கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் பிரசாரம் செய்வதற்காக, தொண்டர்களின் மத்தியில் அவர்களின் ஊடே வாகனத்தில் விஜய் பயணித்து வந்தார். அவருடைய பேச்சை கேட்க கட்டிடங்கள் மீதும் தொண்டர்கள் திரண்டு நிற்கின்றனர். விஜய் பிரசாரம் செய்ய கூடிய திடலில் மின்தடை ஏற்பட்டு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

நாமக்கல் பிரசாரம் முடிந்ததும், கரூர் செல்லும் வழியில் பரமத்திவேலூரில் மக்களை பார்த்ததும் விஜய்யின் வாகனம் நின்றது. வாகனத்தின் மேலே நின்றபடி மக்களை நோக்கி அவர் கையசைத்து தொண்டர்களுக்கு உற்சாக மூட்டினார். அப்போது அவருக்கு வெற்றிலை மாலை பரிசாக வழங்கப்பட்டது. விஜய் பிரசாரத்தின்போது, கூடியிருந்த கூட்டத்தினரில் 15 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 5 பேர் தீவிர சிகிச்சை பெறும் நிலையில் உள்ளதாக முதலில் தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில் இந்த கூட்டநெரிசலில் 4 குழந்தைகள், 10 பெண்கள் உள்ளிட்ட 31 பேர் பலியானதாக கரூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் 50-க்கும் அதிகமானோர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. 

இதற்கிடையே கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் பலர் பலியான சம்பவம் குறித்து கரூர் மாவட்ட கலெக்டரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும் சம்பவ இடத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உடனே செல்லுமாறு அறிவுறுத்திய அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து