முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள் : நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 28 செப்டம்பர் 2025      இந்தியா
Modi 2024-11-25

Source: provided

புதுடெல்லி : பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி (மன் கி பாத்) மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 126-வது நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. அவர் இந்நிகிழ்ச்சியில் பேசும்போது, இந்த விழா காலங்களில் உள்நாட்டு பொருட்களை வாங்கி அர்த்தமுள்ள பண்டிகையாக அதனை உருவாக்க வேண்டும். கடைகளில் பொருட்கள் வாங்கும்போது, உள்ளூர் பொருட்களை வாங்கி ஆதரவளிப்போம் என மக்கள் உறுதியேற்க வேண்டும் என்று கூறினார்.

வருகிற நாட்களில், திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சிக்கான வெற்றியாக இருக்கும். ஒவ்வொரு திருவிழாவின்போதும் நாம் நிறைய பொருட்களை கடைகளுக்கு சென்று வாங்கி வந்திருப்போம். ஆனால், இந்த முறை, ஜி.எஸ்.டி. சேமிப்பு விழாவானது நடந்து கொண்டிருக்கிறது என்றார்.

உள்நாட்டு உற்பத்தி மற்றும் சுய சார்பை ஊக்குவிக்கும் வகையிலும், உள்ளூர் மக்களுக்கு குரல் கொடுப்போம் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த புதிய ஜி.எஸ்.டி. முறையால், பழைய நான்கு அடுக்கு ஜி.எஸ்.டி.க்கு பதிலாக, இரண்டடுக்கு ஜி.எஸ்.டி. முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பல்வேறு பொருட்களுக்கான விலையும் குறைக்கப்பட்டு உள்ளது. நடுத்தர மற்றும் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் நோக்கங்களுக்காக இந்த ஜி.எஸ்.டி. முறை வடிவமைக்கப்பட்டு உள்ளது என அரசு தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து