முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு எப்பொழுதும் துணை நிற்கும் : துணை முதல்வர் உதயநிதி உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 28 செப்டம்பர் 2025      தமிழகம்
DCM-2 2025-09-28

Source: provided

கரூர் : கரூர் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு எப்பொழுதும் துணை நிற்கும் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

கரூர் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், முதல்வர்  உத்தரவின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 40 பேர் உயிரிழந்த துயரத்தை முதலமைச்சரால் தாங்க முடியவில்லை. கூட்ட நெரிசலில் சிக்கி 17 பெண்கள், 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். கரூர் மாவட்டத்தை சேர்ந்த 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல்லைச் சேர்ந்த தலா 2 பேர் உயிரிழந்துள்ளனர்.  மருத்துவர்களிடமும் தனித்தனியாக கேட்டு தெரிந்து கொண்டுள்ளேன். அண்டை மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். 3 மாவட்ட ஆட்சியர்கள் மீட்பு நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். 

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும். இதுபோன்ற விபத்துகள் இனிமேலும் நடக்க கூடாது.  விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.எடப்பாடி பழனிசாமி அதே இடத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கூட்டம் நடத்தியுள்ளார். கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டியது த.வெ.க.வினரின் கடமை. கட்டுக்கடங்காத கூட்டம் வரும்போது தலைவர்கள் குறித்த நேரத்தில் வரவேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து