முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திரவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி : முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 28 செப்டம்பர் 2025      இந்தியா
chandrababu-naidu

Source: provided

அமராவதி : ஒவ்வொரு ஆண்டும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநில மழைக்கால சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது அமராவதியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

தேர்தல் வாக்குறுதிகளை கூட்டணி அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. சூப்பர் சிக்ஸ் திட்டம் ஆந்திராவில் சூப்பர் வெற்றி. ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று மாத உதவி தொகைகளை நேரில் சென்று சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்குவதில் எனக்கு முழு திருப்தியாக உள்ளது.

தெலுங்கு தேசம்​-​பாஜக-ஜன​சேனா கூட்டணியை உறுதி செய்தோம். மக்கள் முழு வெற்றியை அளித்​தனர். அவர்களுக்கு நன்றி கடன் செலுத்துவது போல் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம். தேர்தல் அறிக்கையில் வெளியிடப்படாத மேலும் பல வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறோம். விரைவில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கேப்ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ஒரு​முறை ரூ.15 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். இதற்கு ஆட்டோ ஓட்டுநர்களின் சேவை என்று பெயர் சூட்டப்பட்டுள்​ளது.

இதன்​மூலம் ஆந்திராவில் 2,90,234 பேர் பயனடைவர். இதற்காக ரூ.435 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆட்சி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் மட்டுமே வழங்கியது. எனது தலைமையிலான அரசு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்குகிறது. இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து