முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் குறித்து அமித்ஷா கருத்துக்கு காங். கடும் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 12 அக்டோபர் 2025      இந்தியா
Cong 2024-04-21

Source: provided

புதுடெல்லி : முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் குறித்து அமித்ஷா வெளிப்படுத்திய கருத்துகளை விமர்சித்துள்ள காங்கிரஸ், ‘கடந்த 11 ஆண்டுகளாக அமித்ஷா என்ன செய்து கொண்டிருந்தார்?' என்று கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை(அக். 10) நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசிய அமித்ஷா, 1951 முதல் 2011 வரையிலான சென்சஸ் விவரங்களை வைத்து பார்க்கும்போது, முஸ்லிம் மக்கள்தொகை 24.6 சதவீதம் என்ற விகிதத்தில் அதிகரித்திருக்கிறது. ஆனால், ஹிந்துக்களின் மக்கள்தொகை 4.5 சதவீதம் என்ற விகிதத்தில் குறைந்திருக்கிறது.

இதற்கு கருவுறுதல் குறைந்தது காரணம் அல்ல, இந்தியாவுக்குள் அந்நியர்களின் ஊடுருவலும் வெளிநாட்டிலிருந்து வந்த குடியேற்றமுமே காரணம். இந்திய பாகப்பரிவினையின்போது, இந்தியாவின் இருபுறங்களிலும் மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் உருவானது. அதன்பின், ஒன்று பாகிஸ்தானாகவும் இன்னொன்று வங்கதேசமாகவும் மாறியது. அவ்விரண்டு இடங்களிலிருந்தும் இந்தியாவுக்குள் ஊடுருவிய மக்களால் இந்த விகிதாச்சாரம் நிகழ்ந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், இது குறித்து காங்கிரஸ் தலைவர் பவன் கேரா வெளியிட்டிருக்கும் கண்டனப் பதிவில், ஹிந்து-முஸ்லிம் பிரச்னை என்ற தீக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் அக். 10-இல் எண்ணெய் ஊற்றியிருக்கிறார். அதன்மூலம், எதிர்வரும் தேர்தல்களில் வாக்குகளை ஒருதலைப்படசமாக திசைதிருப்ப பார்த்திருக்கிறார். அவர் பேசியவை மற்றும் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் முஸ்லிம் ஊடுருவல் பரவலாக இருப்பதாகச் சுட்டிக்காட்டி அதனை இழிவுபடுத்தியிருக்கிறார்.

அவர் சொன்ன விஷயங்களிலிருந்து, வெளிநாட்டிலிருந்து வந்த குடியேற்றமும் ஊடுருவலுமே முஸ்லிம் மக்கள்தொகை அதிகரிக்கக் காரணமாயின், கடந்த 11 ஆண்டுகாலமாக உள்துறை அமைச்சர் என்ன செய்து கொண்டிருந்தார்? எனினும், தான் உள்துறை அமைச்சர் என்பதை உடனடியாக உணர்ந்துகொண்ட அவர், முஸ்லிம்களை நோக்கி தான் வீசிய கத்தி தன் மீதே பாயும் என்பதைச் சட்டென சுதாரித்துக்கொண்டு, தான் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடகப் பதிவை நீக்கியிருக்கிறார்  என்று தெரிவித்திருக்கிறார் பவன் கேரா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து