முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி சாலையில் மீண்டும் பலத்த சத்தம்: பொதுமக்கள் பீதி

வியாழக்கிழமை, 13 நவம்பர் 2025      இந்தியா
Delhi 2024-10-19

Source: provided

புதுடெல்லி: டெல்லி சாலையில் மீண்டும் பலத்த சத்தம் கேட்டதை தொடர்ந்து பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

தலைநகர் டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என மத்திய அரசு அறிவித்தது. இந்த குண்டு வெடிப்பு  சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. 

இந்த நிலையில் நேற்று காலை மஹிபால்பூர் பகுதியில் உள்ள ராடிசன் ஹோட்டலுக்கு அருகே திடீரென பலத்த சத்தம் கேட்டது. இந்த சத்தத்தை கேட்ட அப்பகுதியினர், மீண்டும் ஏதேனும் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததா? என பீதியடைந்தனர். மேலும், பலத்த வெடிப்பு சத்தம் கேட்டதாக போலீஸ் அவசர எண்ணுக்கு அழைப்பும் வந்தது.

இதையடுத்து, போலீசாரும் தீயணைப்பு படையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்பகுதியில் சோதனை செய்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமான எந்த சம்பவமும் நடக்கவில்லை என்பது தெரியவந்தது. பின்னர் உள்ளூர்வாசிகள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் விசாரித்தபோது டெல்லி போக்குவரத்துக் கழக பேருந்து அந்த வழியாகச் சென்றபோது பின்புற டயர் வெடித்து பலத்த சத்தம் ஏற்பட்டது என்று தெரியவந்தது. பின்னர் சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வு செய்து வெடிப்பு எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து