முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: மேக் இன் இந்தியா திட்ட பணியை வலுப்படுத்தும்: மத்திய அமைச்சர்

செவ்வாய்க்கிழமை, 3 பெப்ரவரி 2026      இந்தியா
Jaishankar 2023 06 08

புதுடெல்லி, இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் மேக் இன் இந்தியா திட்டம் வலுப்படும் என்று தெரிவித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நாட்டில் வேலை வாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒன்று இறுதி செய்யப்பட்டு உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்து உள்ளார். இதன் தொடர்ச்சியாக, இந்தியாவுக்கான இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் ஆக குறைக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார். இதற்கு இந்திய தரப்பில் இருந்து பெரும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துவதற்கு பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்து உள்ளார் என்றும் ரஷ்யாவுக்கு பதிலாக வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய்யை வாங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது என்றும் அறிவித்துள்ள ட்ரம்ப், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு வலிமையாக உள்ளது என்றும் கூறினார்.

இதுபற்றி மத்திய வெளிவிவகார துறைக்கான மந்திரி ஜெய்சங்கர் கூறும்போது, இந்த ஒப்பந்தம் நாட்டில் வேலை வாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிக்கும். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதனுடன், புதிய கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்கும் மற்றும் இந்தியாவின் முதன்மையான மேக் இன் இந்தியா திட்ட பணியை வலுப்படுத்தும் என கூறினார். ட்ரம்ப்பின் இந்த அறிவிப்புக்கு தன்னுடைய பாராட்டுகளையும் அவர் தெரிவித்து கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து