முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றார் கொலம்பியாவின் அதிபர் அதிபர் ட்ரம்புடன் பேச்சுவார்த்தை

செவ்வாய்க்கிழமை, 3 பெப்ரவரி 2026      உலகம்
Trump

நியூயார்க், அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்ற கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோ வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்பை நேரில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அதிரடியாகத் தாக்குதல் நடத்தி அமெரிக்கா சிறைப்பிடித்தது. போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் அமெரிக்க நீதிமன்றத்தில் வெனிசுவேலா அதிபரின் வழக்கு விசாரிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்குள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோவின் மீது குற்றம்சாட்டிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளால், அதிபர் பெட்ரோ, அவரது குடும்பத்தினர் மற்றும் கொலம்பியாவின் அரசு அதிகாரிகளின் மீது தடை விதிப்பதாக ட்ரம்ப்பின் நிர்வாகம் கடந்த 2025 அக்டோபரில் அறிவித்திருந்தது. இந்த நிலையில், அரசு முறைப் பயணமாக நேற்று (பிப். 3) அமெரிக்காவுக்குச் சென்ற கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோ வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்பை நேரில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அதிபர் ட்ரம்ப் கூறுகையில், வெனிசுவேலா தாக்குதலுக்குப் பிறகு அவர் (அதிபர் குஸ்தாவோ பெட்ரோ) மிகவும் நல்லவராக நடந்து கொள்கிறார்” எனக் கூறியுள்ளார். முன்னதாக, இடதுசாரி கொள்கைகளுடைய அதிபர் குஸ்தாவோ காஸா, வெனிசுவேலா விவகாரங்களில், அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் அனைத்தையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்தச் சூழலில், அமெரிக்கா மற்றும் கொலம்பியா அதிபர்கள் இடையிலான சந்திப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து