முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூரில் விபத்து: 2 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 3 பெப்ரவரி 2026      தமிழகம்
Suicide 2023 04 29

திருப்பூர், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (50) மற்றும் கேரளாவை சேர்ந்த ராகேஷ்(41). இவர்கள் இருவரும் பெருந்துறை அருகே உள்ள தேங்காய் எண்ணை நிறுவனத்தில் அலுவலகப் பணியாளராக பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் கோவையில் இருந்து பெருந்துறை நோக்கி வாடகை காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திருப்பூர் மாவட்டம் அவிநாசி- புதிய திருப்பூர் சேலம் கொச்சி புறவழிச்சாலை அருகே வந்த போது, முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி திடிரென நிறுத்தியது.

இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் பின்பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மணிவண்ணன், ராகேஷ் இருவரும் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இருவரது உடலையும் மீட்ட பெருமாநல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து