முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடாவில் துப்பாக்கிச்சூடு: இந்தியர்கள் 3 பேர் கைது

செவ்வாய்க்கிழமை, 3 பெப்ரவரி 2026      உலகம்
Jail

ஓஸ்லோ, கனடா நாட்டில், தனி நபர் ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று இந்தியர்களை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் சர்ரே நகரத்தின் கிரெசண்ட் பீச் பகுதியில், கடந்த பிப்.1 அன்று அதிகாலை அங்குள்ள வீட்டின் மீது சில நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்துவதாக, கனடா காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பணம் பறிக்கும் கும்பல்களுக்கு எதிரான ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் இந்தியாவைச் சேர்ந்த ஹர்ஜோத் சிங் (வயது 21), தரன்வீர் சிங் (19) மற்றும் தயாஜீத் சிங் பில்லிங் (21) ஆகியோரை (பிப். 2) கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், 3 பேரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மூவரும் பிப்.5 வரை விசாரணைக்காக அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட மூவரும் வெளிநாட்டவர்கள் என்பதால் அவர்கள் மீது கூடுதல் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. முன்னதாக, பிரோஜக்ட் அஷ்ஷுரன்ஸ் எனும் பெயரில் கனடா அதிகாரிகள் பணம் பறிக்கும் கும்பல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் அடிப்படையில், இந்தியர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சமீபகாலமாக சர்ரே நகரத்தில் வீடுகள் மற்றும் வர்த்தக மையங்களின் மீதான கும்பல்களின் துப்பாக்கிச் சூடு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து