முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள்: மத்திய அரசை கண்டித்து பிப்ரவரி 12-ல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்: 12 முக்கிய தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 3 பெப்ரவரி 2026      தமிழகம்
Central-government 2021 12-

சென்னை, தொழிலாளர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை கண்டித்து நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தபால் துறை, இன்சூரன்ஸ், வங்கிகள், தணிக்கை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த சுமார் 25 கோடி தொழிலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

மத்திய தொழிற்சங்கங்கள் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ. என்.டி.யூ.சி, எல்.பி.எப். உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. தொழிலாளர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை கண்டித்து போராட்டம் நடக்கிறது. தொழிலாளர் நலச் சட்டம் அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக 4 ஆக சுருக்கி லேபர் கோடு என்று அமைக்கப்பட்டு சட்டங்கள் இருப்பதை கண்டிக்கும் வகையில் போராட்டத்தை தொழிலாளர்கள், விவசாயிகள் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

சுமார் 25 கோடி தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். தபால் துறை, இன்சூரன்ஸ், வங்கிகள், தணிக்கை துறை உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்கள் இதில் கலந்துகொள்ள தயாராகி வருகின்றனர். தொழிலாளருக்கு விரோதமாக கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர் சங்கங்கள் உள்ளிட்ட சில சங்கங்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவளித்து களத்தில் இறங்க உள்ளன. வரும் 12-ம் தேதி அண்ணா சாலையில் உள்ள தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்த திட்டமிட்டு இருப்பதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து