முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வை விஜய் விமர்சிப்பது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 3 பெப்ரவரி 2026      தமிழகம்
Anbil-Mahesh 2024-12-04

திருச்சி, த.வெ.க. தொண்டர்களை உற்சாகப்படுத்தவே தி.மு.க.வை விமர்சனம் செய்து விஜய் பேசியுள்ளார் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 3 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கட்சியின் தலைவர் விஜய், தி.மு.க.வை கடுமையாக விமர்சித்துப் பேசினார். விஜய்யின் பேச்சுக்கு தி.மு.க.வினர் பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர். திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் இதற்கு பதிலளிக்கையில், அவர்களுடைய கட்சி சார்ந்த ஒரு ஆண்டு விழாவில் அவர்களின் கட்சி தோழர்களை உற்சாகப்படுத்தவே அவர்(விஜய்) அப்படி பேசியிருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

எங்களுடைய முதல்வர், தமிழ்நாட்டின் தலைவராக பொறுப்பேற்றது முதலே எங்கள் மீது பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து வைத்துக்கொண்டே இருந்தாலும் நாங்கள் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறோம். நாங்கள் வென்றது இடங்களை அல்ல, மக்களின் மனங்களை வென்றிருக்கிறோம் என்பது நாட்டு மக்களுக்கே தெரியும். மக்களுடைய மனங்களை வெல்வதற்கு நாங்கள் என்னென்ன வேலைகள் செய்ய முடியுமோ அதை நாங்கள் கண்டிப்பாக செய்வோம், அந்த பணிகளில் எங்களை நாங்கள் முழுமையாக ஈடுபடுத்துவோம்" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து