முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 31,934 கோடி முதலீட்டில் முடிவுற்ற 52 திட்டப்பணிகள்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2026      தமிழகம்
CM-1-2026-02-12

சென்னை, தமிழகத்தில் புதிதாக 82,664 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் ரூ.31,934 கோடி முதலீட்டில் 

முடிவுற்ற 52 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். மேலும், ரூ. 36,968 கோடி முதலீட்டில் 60,823 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 71 புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், முதலீடுகள் தொடர்பான செயலாக்க மாநாடு தொடங்கியது. சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் கெயிட்டன்ஸ் தமிழ்நாடு சார்பில் நடைபெறும் கன்வர்ஷன் கான்கிளேவ் 2026 மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தி.மு.க. ஆட்சியில் தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்தது தொடர்பாக இந்த மாநாடு நடைபெறுகிறது. 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாட்டில், ரூ. 36,968 கோடி முதலீட்டில் 60,823 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 71 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 31,934 கோடி முதலீட்டில் 82,664 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 52 முடிவுற்ற திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

மேலும், ரூ. 5,000 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 5000 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு என்ற வகையில், 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று, அடிக்கல் நாட்டப்பட்ட மற்றும் தொடங்கப்பட்ட திட்டங்கள், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கோயம்புத்தூர், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பாரத் பயோடெக் நிறுவனம், 5000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்க உள்ள உயிரியல் மற்றும் மருந்துகள் உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் ஹுண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் நிறுவனம், 7000 மாணவர்களுக்கு திறன்பயிற்சி மேற்கொள்ளும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகிய 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேற்கூறிய திட்டங்கள், பல்வேறு துறைகளில், மாநிலம் முழுவதும் நிறுவப்பட உள்ளது என்பதுதான் மாநாட்டின் சிறப்பம்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து