முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப், டெலிகிராம் திடீர் நீக்கம் 10 கோடி மக்கள் அவதி

வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2026      உலகம்
Whatsapp

மாஸ்கோ, ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப் நீக்கக்கப்பட்டதால் 10 கோடி பேர் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் செயலிகளை மக்கள் பயன்படுத்தவைக்கும் நோக்கில், வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் செயலிகளை ரஷ்ய அரசு நீக்கியிருக்கிறது. ரஷ்யாவில், இணையதளத்தில் செயலிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அந்நாட்டு அரசு எடுத்திருக்கும் மிக முக்கிய நடவடிக்கையால் கிட்டத்தட்ட 10 கோடி பேர் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

வாட்ஸ்ஆப் நிறுவனம் தன்னுடைய எக்ஸ் தளத்தில், இன்று ரஷ்ய அரசு, அந்நாட்டில் உள்ள அனைத்து செல்போன்களிலிலும் வாட்ஸ்ஆப்பை நீக்கியிருக்கிறது. அந்நாட்டு மக்கள் உள்நாட்டுத் தயாரிப்பு செயலிகளைப் பயன்படுத்த அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இதனால் 10 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையால் ரஷ்ய மக்களின் பாதுகாப்பில் குறைபாடுக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளது.பயனர்கள் எங்களுடன் தொடர்பில் இருக்க அனைத்து நடவடிக்கைளையும் மேற்கொள்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து டெலிகிராம் நிறுவனம் தெரிவிக்கையில் இது ஒரு நாட்டு அரசின் நடவடிக்கை, நிறுவனத்தின் கொள்கைகளுக்குள் இது வரவில்லை. எங்கள் நிறுவனத்தின் கொள்கை மக்களின் சுதந்திரம், தனியுரிமை. இதில் அழுத்தத்துக்கு இடமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரைன் மீதான தாக்குதலின்போது, வெளிநாட்டு தொழில்நுட்ப சேவை நிறுவனங்களுக்கும், ரஷ்ய அரசுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக, ரஷ்ய அரசு, உள்நாட்டில் தயாரிக்கப்படும் செயலிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, மேக்ஸ் என்ற செயலி உருவாக்கப்பட்டது. ஆனால், இது மக்களை கண்காணிக்க உருவாக்கப்பட்டதாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

பயனர்களின் சாட் தகவல்கள், தனியுரிமை பாதுகாப்புக்குரியது என்று வாட்ஸ்ஆப் கூறி வருகிறது. அந்த தகவல்களை உளவு பார்க்க, ரஷ்ய அரசிடம் தர வாட்ஸ்ஆப் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, மக்களை கண்காணிக்க, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மேக்ஸ் செயலியை பயன்படுத்த அந்நாட்டு அரசு அறிவுறுத்தி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து