முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு தேர்வு வாரியங்கள் மூலம் தேர்வான 9,801 பேருக்கு புதிதாக பணிநியமன ஆணைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2026      தமிழகம்
CM-2-2026-02-13

சென்னை, தமிழ்நாடு அரசின் பணியாளர் தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 9801 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.  மேலும் “திறன் 3600” என்ற இணையதளத்தையும், அனைத்து தேர்வு முகமைகள் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான அறிவிக்கைகளை கைபேசி வழியாக அறியும் வண்ணம் “தேர்வுக்களம்” எனும் ஒருங்கிணைந்த கைபேசி செயலியையும் தொடங்கி வைத்தார். 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (13.2.2026) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மனிதவள மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு அரசின் பணியாளர் தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2025-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தொகுதி-IV உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 9801 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள். 

மேலும், சென்னை, அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரியில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 8 குடியிருப்புகளை திறந்து வைத்து, சென்னை, செனாய் நகரில் 62 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து நவீன வசதிகளுடன் கட்டப்படவுள்ள அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி, அரசு அலுவலர்கள் முன்னணி நிறுவனங்கள் வாயிலாக இணையவழியில் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட “திறன் 3600” என்ற இணையதளத்தையும், அனைத்து தேர்வு முகமைகள் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான அறிவிக்கைகளை கைபேசி வழியாக அறியும் வண்ணம் “தேர்வுக்களம்” எனும் ஒருங்கிணைந்த கைபேசி செயலியையும் தொடங்கி வைத்தார். 

திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாடு இளைஞர்களுக்கு அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திட வேண்டும் என்பதைத் தனது முழு முதற் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

அதன்படி, தற்போது வரை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்  வாயிலாக 45,126 நபர்கள், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக 24,927 நபர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம்  வாயிலாக 12,894 நபர்கள், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக 11,244 நபர்கள், என தெரிவு முகமைகள் வாயிலாக மொத்தம் 94,191 நபர்கள் தெரிவு செய்யப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. 

 

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் பணியாளர் தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2025-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தொகுதி-IV உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 9,801 நபர்களில் இருந்து 4213 நபர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் நேற்று விழாவில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து