முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவதூறு வழக்கில் ராகுலுக்கு நீதிமன்றம் ஜாமீன்

சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2026      தமிழகம்
Rahul-Gandhi-2023-04-13

பிவாண்டி, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கு காரணமாக ராகுல் காந்தி, மகாராஷ்டிராவின் பிவாண்டி நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

மகாத்மா காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ்.-க்கு தொடர்பு இருப்பதாக கடந்த 2014-ம் ஆண்டு ராகுல் காந்தி கூறியதற்கு எதிராக அப்போது பிவாண்டியின் ஆர்.எஸ்.எஸ். அலுலகப் பொறுப்பாளராக இருந்த ராஜேஷ் குந்தே என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், பிவாண்டி நீதிமன்றம் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது. 

மகாராஷ்டிராவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிவராஜ் பாட்டீல், ராகுல் காந்திக்கு ஜாமீன் அளிக்க உத்தரவாத கடிதம் கொடுத்திருந்தார். அவர் காலமான நிலையில், வேறு ஒருவர் உத்தரவாத கடிதம் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை காரணமாக, ராகுல் காந்தி  நீதிமன்றத்தில் ஆஜரானார்.

ராகுல் காந்தியின் வருகையை ஒட்டி பிவாண்டியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. நீதிமன்றத்தை ஒட்டிய கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நீதிமன்றத்துக்கு வந்த ராகுல் காந்தி, மீண்டும் ஜாமீன் பெற்று திரும்பிச் சென்றார். பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘இது ஒரு தனிப்பட்ட அவதூறு புகார். முந்தைய ஜாமீன்தாரரான சிவராஜ் பாட்டீல் காலமானதை அடுத்து, தற்போது மகாராஷ்டிர பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கால் நீதிமன்றத்தில் நேற்று உத்தரவாத கடிதத்தை அளித்தார். 

நீதிமன்றம் அதை ஏற்று ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கு விரைவாக நடைபெற்று வருகிறது. குற்றச்சாட்டுக்கு உள்ளான ராகுல் காந்தி நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து ஒத்துழைப்பு அளித்து வருகிறார். இந்த வழக்கை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், நீதிமன்றத்தில் உண்மையை முன்வைக்கப் போவதாகவும் ராகுல் காந்தி ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மன்னிப்பு கேட்பது என்ற கேள்விக்கே இடமில்லை’’ என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து