முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி ஏ.ஐ. மாநாட்டில் காங்., போராட்டம் ஒரு திட்டமிட்ட சதி: அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றஞ்சாட்டு

சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2026      இந்தியா
Kiran-Rijiju 2023-01-16

டெல்லி, காங்கிரஸ் இளைஞர் பிரிவினர் ஏ.ஐ. மாநாட்டில் நடத்திய போராட்டம் தவறாக நடத்தப்பட்டது அல்ல. நன்றாக திட்டமிட்ட சதி. நாட்டை அவமானப்படுத்த காங்கிரஸ் இளைஞர்களை பயன்படுத்துகிறது என்று அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஏ.ஐ. மாநாடு நடைபெற்ற இடத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் மேலாடையின்றி போராட்டம் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 4 தலைவர்களை கைது செய்து டெல்லி போலீசார் விசாரணைக்காக காவலில் எடுத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:-

காங்கிரஸ் இளைஞர் பிரிவினர் ஏ.ஐ. மாநாட்டில் நடத்திய போராட்டம் தவறாக நடத்தப்பட்டது அல்ல. நன்றாக திட்டமிட்ட சதி. நாட்டை அவமானப்படுத்த காங்கிரஸ் இளைஞர்களை பயன்படுத்துகிறது. இது விட பெரிய அவமானம் இருக்க முடியுமா?. இளைஞர்கள் பிரிவு மூலம் ஏ.ஐ. மாநாட்டில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் நாட்டிற்கு எதிராக மிகப்பெரிய பாவம் செய்துள்ளது. ஒட்டுமொத்த நாடும் காங்கிரஸ் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்தியா வளரும்போது, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கவலைப்படுகிறார்கள். தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதை எப்போது நிறுத்துவீர்கள்?. இவ்வாறு கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து