முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டித்வா புயல் பாதிப்புக்கு இந்தியா நிதி உதவி: பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் நன்றி

சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2026      இந்தியா
Modi 2024-12-04

புதுடெல்லி, டித்வா புயல் பாதிப்புக்கு இந்தியா நிதி உதவி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியா சார்பில் சர்வதேச செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு டெல்லியில் கடந்த 5 நாட்கள் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டன. பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட முக்கியமான நாடுகளின் தலைவர்கள் நேரில் வந்து இதில் கலந்து கொண்டனர். இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகாவும் பங்கேற்றார்.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் அனு ரகுமார திசநாயகாவை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது செயற்கை நுண்ணறிவு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமர் மோடியை அனுரகுமார திசநாயகா பாராட்டினார். இதுபோல இந்திய அரசின் பல்வேறு அணுகுமுறைகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். மேலும், டித்வா புயல் பாதிப்புக்கு இந்தியா நிதி உதவி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இதுகுறித்து எக்ஸ் வலைத்தளத்திலும் அவர் பதிவிட்டு இருந்தார். "எங்கள் வரலாற்று உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பொருளாதார, வர்த்தகம் மற்றும் கலாசார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விரிவான விவாதங்களை நடத்தினோம். சமீபத்திய டித்வா சூறாவளியின்போது இந்தியாவின் விதிவிலக்கான ஆதரவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதில் கூறியுள்ளார்.

இதுபோல பிரதமர் மோடியும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அவர் "எரிசக்தி, இணைப்பு, உள்கட்டமைப்பு, சுகாதாரம், திறன் மேம்பாடு, கலாசாரம், நீலப்பொருளாதாரம் மற்றும் பலவற்றில் ஒத்துழைப்புக்கான வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

டித்வா புயல் பாதிப்புக்காக இலங்கைக்கு இந்தியா முதல் ஆளாக ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் மறுசீரமைப்பு தொகுப்புக்காக உறுதி செய்தது. இதில் சாலைகள், ரெயில்வே மற்றும் பாலங்கள் மறுசீரமைப்பு, வீடுகள் மறுகட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளுக்கு ஆதரவாக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து