முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.1536.31 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட மதுரையில் ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2026      தமிழகம்
CM-1-2026-02-21

மதுரை, மதுரையில் 867 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1536.31 கோடி செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

பல்வேறு விழாக்கள்...

மதுரையில் பல்வேறு அரசு விழாக்கள், தி.மு.க. தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் பங்கேற்க நேற்றஉ காலை விமானம் மூலம் முதல்வர்  மு.க.ஸ்டாலின் மதுரை வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு விமான நிலையத்திலிருந்து வடபழஞ்சியில் உள்ள எல்காட் தொழில்நுட்ப பூங்காவிற்கு மு.க.ஸ்டாலின் காரில் வந்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்... 

அங்கு சென்றடைந்த முதல்வர்  மு.க.ஸ்டாலின் எல்காட் வளாகத்தில் பினாகிள் இன்போடெக் நிறுவனத்தின் விரிவுப்படுத்தப்பட்ட புதிய உலகளாவிய சிறப்புப் பொறியியல் மையக்கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் புதிய கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து எச்.சி.எல். நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர்  மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அங்கு ரூ.3.50 கோடி செலவில் அமைக்கப்பட்டிருந்த அங்கூரான் நவீன அறிவியல் மையத்தையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

புதிய மேம்பாலம் திறப்பு...

பின்னர் மதுரை தமுக்கத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரையில் ரூ.213.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலத்தை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்பணித்தார். இதே நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்டம் சூரக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மருது சகோதரர்களின் சிலைகளை காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அரசு அலுவலக கட்டிடம்...

தொடர்ந்து மதுரை அரசு மீனாட்சி கல்லூரிக்கு சென்ற முதல்வர்  மு.க.ஸ்டாலின் அங்கு ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள எச்.பி. கணினி திறன் மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்தார். பின்னர் ரூ.50 கோடி செலவில் மறு சீரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்ட வண்டியூர் பூங்காவை முதல்வர்  திறந்து வைத்து பார்வையிட்டார். இங்கு நடந்த விழாவில் ரூ.1.67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.

கூட்டுக் குடிநீர் திட்டம்...

 

மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், செல்லம்பட்டி, கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி மற்றும் வாடிப்பட்டி ஆகிய 7 ஒன்றியங்களை சார்ந்த 867 ஊரகக் குடியிருப்புகளில் உள்ள 10 லட்சத்து 93 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில், 1,536 கோடியே 31 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  இதில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ராவிஜயன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து