முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரத் கௌரவ்’ விருதுக்கு துபை இந்தியர் தேர்வு

வியாழக்கிழமை, 9 ஜனவரி 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜன, 10 - மதிப்புமிக்க பாரத் கௌரவ் (இந்தியாவின் பெருமைக்குரியவர்) விருதுக்கு துபையில் வசிக்கும் இந்தியர் ஜான் ஐபே (63) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய சர்வதேச நட்புறவு சங்கம் இவரை இவ்விருதுக்கு தேர்வு செய்துள்ளது. டெல்லியில் வியாழக்கிழமை நடைபெறும் விழாவில் ஜான் ஐபே, விருதை பெற்றுக்கொள்கிறார்.

கட்டுமானப் பணி மேலாளரான ஜான் ஐபே, பஹ்ரைனில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார். கடந்த 14 ஆண்டுகளாக சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 2006-ல் பஹ்ரைனின் குடைபியா நகரில் 16 பேரை பலிகொண்ட தீ விபத்தில், உயிர் பிழைத்தவர்களுக்கு ஜான் ஐபே உதவினார். ஆயத்த ஆடை தொழிற்சாலை ஒன்று திவால் ஆனபோது, அதில் பணியாற்றிய 800 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் ஏற்படுத்தினார்.

பஹ்ரைனில் ஏழை இந்திய தொழிலாளர் களுக்கு இலவச இன்சூரன்ஸ் திட்டம் அமல்படுத்தப்படுவதற்கு தூண்டுகோலாக இருந்தார். இவ்விருதை அன்னை தெரசா, கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், நடிகர்கள் ஷம்மி கபூர், ராஜேஷ் கன்னா, தேவ் ஆனந்த் உள்ளிட்டோர் ஏற்கெனவே பெற்றுள்ளனர். இவர்களுடன் தற்போது ஜான் ஐபேவும் இணைகிறார். இத் தகவலை கல்ஃப் டைலி நியூஸ் வெளியிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago