முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மசோதாக்களுக்கு முட்டுக்கட்டை போடும் பா.ஜ.க: ராகுல்

சனிக்கிழமை, 15 பெப்ரவரி 2014      ஊழல்
Image Unavailable

 

பெல்காம், பிப்.16 - ஊழலுக்கு எதிரான ஆறு மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவிடாமல் பா.ஜ.க தடுக்கிறது என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

இரண்டு நாள் பயணமாக கர்நாடகம் மாநிலம் சென்றுள்ள ராகுல் காந்தி, பெல்காம் பொதுக்கூட்டத்தில் நேற்று  பங்கேற்று உரையாற்றினார். 

அப்போது பேசிய ராகுல் காந்தி, "நாங்கள் நாடாளுமன்றத்தில் ஊழலுக்கு எதிரான ஆறு மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், இந்த மசோதாக்களை நிறைவேற்றவிடாமல் தடுப்பது யார்? பா.ஜ.க. தான் தடுக்கிறது. அவர்கள் நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் தடுக்கிறார்கள்,” என்றார். 

நாடாளுமன்றத்தில் ஊழலுக்கு எதிரான ஆறு மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்று ராகுல் காந்தி தீவிரமாக வலியுறுத்திவருகிறார். 

மேலும், மக்களுக்கு அதிகாரம் வழங்கும் தகவல் அறியும் உரிமை சட்டம் போன்ற மசோதாக்களை காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ஆறு மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு எதிர்கட்சிகளிடமிருந்து ராகுல் காந்தி ஆதரவு கோரினார். இது குறித்து அவர் கூறுகையில், "ஊழலை எதிர்த்து போராடும் இம்மசோதாக்களை நிறைவேற்ற எதிர்கட்சிகள் தடுத்து நிறுத்தகூடாது. பொதுமக்களுக்கு அதிகாரம் அளிக்கும் இது போன்ற மசோதாக்களை நிறைவேற்ற, நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும்" என்று அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago