முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெங்காய ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளுக்கு பவார் எதிர்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

நாசிக், ஜூலை 21 - வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய வேளாண் துறை அமைச்சருமான சரத்பவார் எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து அவர் நாசிக்கில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

நாசிக் மாவட்டத்தில் இருந்து அதிகளவில் வெங்காய ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. இது தொடர்பாக மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுக்கு கடிதம் எழுதியுள்ளேன். காய்கறிகள் மற்றும் கறிக் கோழிகளின் உற்பத்தியை பெருக்குவதில் விவசாயிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். மாம்பழம், சப்போட்டா, திராட்சை மற்றும் மாதுளை ஆகிய பழங்களை ஏற்றுமதி செய்வதில் மகராஷ்டிரா மாநிலம் முன்னிலையில் உள்ளது. மகராஷ்டிர மாநிலத்தில் தற்போது பருவ மழை தாமதமாகி வருவதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago