எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூலை.- 7 -2011-12-ம் ஆண்டுக்கான தமிழக திட்டங்களுக்கு ரூ.23 ஆயிரத்து 535 கோடியை மத்திய திட் டக்குழு ஒதுக்கீடு செய்துள்ளது. திட்டக்குழுவுடன் முதல்வர் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட ரூ.3 ஆயிரத்து 467 கோடி அதிகமாகும். இந்தநிதி ஒதுக்கீடு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார். நாட்டிலுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய திட்டக்குழு நிதி ஒதுக்கீடு செய்யும். நிதி ஒதுக்கீடு செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன் திட்டக்கமிஷன் துணைத்தலைவர் பேச்சுவார்த்தை நடத்துவார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் அந்தந்த மாநிலங்களின் திட்டங்களுக்கு தகுந்தவாறு மத்திய திட்டக்கமிஷன் நிதி ஒதுக்கீடு செய்யும். மாநிலங்களுக்கு திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பாக நேற்று மத்திய திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மாண்டக் சிங் அலுவாலியா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வருமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாண்டெக் சிங் அலுவாலியா அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று முதல்வர் ஜெயலலிதா நேற்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் புதுடெல்லி சென்றார். டெல்லி சென்ற அவரை முன்னதாக தமிழக அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வழியனுப்பி வைத்தனர். முதல்வர் ஜெயலலிதாவுடன் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் சாரங்கி மற்றும் உயரதிகாரிகள் சென்றனர். டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி, நாடாளுமன்ற அ.தி.மு.க. குழு தலைவர் தம்பித்துறை மற்றும் கட்சியின் எம்.பி.க்கள் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் ஜெயலலிதா நேராக தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றார். அங்கு ஜெயலலிதாவுக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அதை ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார். அதனையடுத்து மத்திய திட்டக்குழு கூட்டத்திற்கு சென்றார். கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு ஜெயலலிதா சென்றதும் அவருக்கு மாண்டக் சிங் அலுவாலியா பூச்செண்டு கொடுத்து அன்புடன் வரவேற்றார். மாண்டெக் சிங் அலுவாலியாவுடன் ஜெயலலிதா சிறிது நேரம் பேசினார். இந்த பேச்சுக்கு பின்னர் மத்திய திட்டக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும் மாண்டக் சிங் அலுவாலியா மற்றும் அவரது துறையை சேர்ந்த உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கும் ஆயத்தப்பணிகளை மேற்கொண்டுவிட்தாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் குக்கிராமங்களுக்கும் சாலை வசதி செய்து கொடுத்தல், மாநிலத்தில் சுகாதார வசதிகளை பெருக்கவும், வறுமையை ஒழிக்கவும் தமிழகத்திற்கு ரூ.23 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார். ஜெயலலிதா கூறிய நியாயமான திட்டங்களை ஆய்வு செய்த திட்டக்கமிஷன் ஜெயலலிதா கேட்டதை விட ரூ.535 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கியது. அதாவது 2011-12-ம் ஆண்டுக்கான மொத்த திட்ட நிதி ரூ.23 ஆயிரத்து 535 கோடியை திட்டக்கமிஷன் ஒதுக்கீடு செய்தது. இந்த நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டு தமிழகத்திற்கு திட்டக்கமிஷன் ஒதுக்கீடு செய்த தொகையை விட ரூ. 3 ஆயிரத்து 535 கோடி அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டுகளில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசில் தி.மு.க. இடம்பெற்றிருந்த போதிலும் கருணாநிதியால் தமிழக திட்டங்களுக்கு இவ்வளவு அதிகமாக நிதியை கேட்டு பெற முடியவில்லை. ஆனால் அ.தி.மு.க. கட்சியானது காங்கிரஸ் கூட்டணியில் இல்லாததோடு மத்திய அரசிலும் இடம்பெறவில்லை. அப்படி இருந்தும் ஜெயலலிதா தனது நிர்வாக திறமையால் கூடுதல் நிதி பெற்றுள்ளார்.
கூட்டம் முடிந்ததும் ஜெயலிலாதவை மாண்டெக் சிங் அலுவாலியா வாசல்படி வரை வந்து மரியாதையுடன் வழியனுப்பி வைத்தார். வெளியே வந்ததும் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஜெயலலிதா திட்டக்குழுவின் நிதி ஒதுக்கீடு ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். இந்த நிதி ஒதுக்கீட்டை நாங்கள் எதிர்பார்த்ததுதான். தமிழக அரசின் கடன் ரூ. ஒரு லட்சம் கோடியாக உள்ளது. மேலும் 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பில் இருக்கிறது. இதை சமாளிக்க தமிழகத்திற்கு மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று திட்டக்குழுவை நான் கேட்டுக்கொண்டேன். தமிழக அரசின் சில கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. தமிழக மாணவர்களுக்கு லேப் டாப் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன் என்று ஜெயலலிதா மேலும் கூறினார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மாண்டக்சிங் அலுவாலியாவிடம் தமிழகத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரியிருப்பது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த மாண்டக் சிங் அலுவாலியா, இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதப்படும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை: அமைச்சர்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை என்றும், சூரியனை எந்த கையாலும் மறைக்க முடியாது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
தங்கம், வெள்ளி விலை குறைவு
13 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வெள்ளிக்கிழமை குறைந்து விற்பனையானது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ.
-
மகளிர் உரிமைத்தொகை குறித்த அரசின் அறிவிப்பால் வங்கிகளில் அலைமோதிய பெண்கள் கூட்டம்
13 Feb 2026சென்னை, தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை ரூ. 5 ஆயிரம் எடுக்க வங்கிகளில் நேற்று அலைமோதிய பெண்கள் கூட்டத்தால் வங்கி ஊழியர்கள் திணறினர்.
-
தமிழகத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் மற்றும் சிறப்பு தொகை ரூ.2,000 உள்பட 1.31 கோடி மகளிர் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு: திராவிட மாடல் 2.0 ஆட்சிக்காலத்தில் உரிமை தொகை ரூ.2,000 ஆக மேலும் உயர்த்தப்படும்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 நேற்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.
-
பல்வேறு தேர்வு வாரியங்கள் மூலம் தேர்வான 9,801 பேருக்கு புதிதாக பணிநியமன ஆணைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Feb 2026சென்னை, தமிழ்நாடு அரசின் பணியாளர் தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந
-
விஜய் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற வடமாநிலத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு
13 Feb 2026சேலம், சேலத்தில் நடந்த விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் மயக்கம் அடைந்த நபர் திடீர் என்று உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்று காதலர் தினம்: ரோஜா பூக்களின் விலை கடும் உயர்வு
13 Feb 2026போரூர், நாடு முழுவதும் இன்று காதலர்களால் காதலர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ரோஜா பூக்களின் விலை கடும் உயர்ந்துள்ளது.
-
தோல்வி பயத்தால் ரூ.2000 தருவதாக முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
13 Feb 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலில் தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகையை அதிகரித்துள்ளார் என்று அ.தி.மு.க.
-
திருவண்ணாமலையில் சோகம்: வீடு இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழப்பு
13 Feb 2026திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் வீடு இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல் மனைவி இறந்துவிட்டால் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது: ஐகோர்ட்
13 Feb 2026சென்னை, முதல் மனைவி இறந்துவிட்டால் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது என்று உயர் நீதமன்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளத
-
மோடியின் அரசியல் வாழ்க்கை: வைரலான அதிபர் ட்ரம்ப் பேச்சு
13 Feb 2026நியூயார்க், பிரதமர் நரேந்திர மோடியின் "அரசியல் வாழ்க்கையை அழிக்க நான் விரும்பவில்லை" என கடந்தாண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்ம்ப் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைர
-
காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ரூ. 115 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்
13 Feb 2026சென்னை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ரூ. 115 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
13 Feb 2026பலூசிஸ்தான், பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Feb 2026- இராமேசுவரம் சுவாமி அம்பாள் முத்தங்கி சேவை, இரவு ங்க பல்லக்கில் புறப்பாடு,
- திருமயம் ஆண்டாள் திருக்கல்யாணம்
- புஷ்ப பல்லக்கில் பவனி.
- இராமநாதபுரம் செட்டிதெரு முத்தாலம்மன் பவ
-
இன்றைய நாள் எப்படி?
13 Feb 2026


