எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை ஆக-10 - நெல்லை பல்கலைக்கழகத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து உயர் கல்வித்துறைக்கு புகார் கொடுத்த தொலைநெறி தொடர்கல்வி இயக்குனருக்கு கொலைமிரட்டல் விடுத்துவரும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ள விவகாரம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை அருகேயுள்ள அபிஷேகபட்டியில் அமைந்துள்ளது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பி.எட். பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. தொலைநெறி கல்வியில் பி.எட். படிப்பிற்கான வசதி ஒரு சில பல்கலைக்கழத்தில் மட்டுமே உள்ளதால் இந்த படிப்பில் சேர ஏராளமானவர்கள் விண்ணப்பித்திருந்தனர். குறிப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள் பி.எட். படிப்பில் சேர மிகவும் ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில் கடந்த 2010-11ம் ஆண்டு பி.எட்.படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்குவதிலேயே முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் விண்ணப்பங்கள் வழங்கும் காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே அப்போது பல்கலைக்கழக துணைவேந்தராக பொறுப்பு வகித்து வந்த சபாபதி மோகன் பி.எட்.பிடிப்பிற்கு விண்ணப்பித்திருந்த 200க்கு மேற்பட்டவர்களிடம் பல கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு விதிமுறைகளுக்கு புற்பாக பி.எட். சீட் வழங்குமாறு பரிந்துரை செய்ததால் அவர்களுக்கு விதிமுறைகளுக்கு புறம்பாக சீட் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு நிலவிவந்த சூழலில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி துறை இயக்குனராக ஆர்.ரமேஷ் கடந்த 1.7.2011 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் தொலைநெறி தொடர் கல்வி இயக்கத்தில் பி.எட்.சீட் வழங்கியதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதை கண்டறிந்து ஆதாரப்பூர்வமாக உயர்கல்வித்துறைக்கு புகார் கொடுத்தார். இதனைத்தொடர்ந்து உயர்கல்வித்துறை இயக்குனரகம் நெல்லை பல்கலைக்கழகத்தில் நேரடியாக ஆய்வு செய்து விசாரணை நடத்தி சென்றது. இதற்கிடையே பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் முறைகேடுகள் குறித்து புகார் தெரிவித்த தொலைநெறி தொடர் கல்வி இயக்குனர் ரமேஷை மர்ம நபர்கள் சிலர் தொலைபேசியில் தொடர்புகொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்புகொண்ட மர்ம நபர்கள் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகளை வெளிக்கொண்டுவந்தால் கொலைசெய்வதாக மிரட்டியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர் தனக்கு கொலைமிரட்டல் விடுத்து வரும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், தனக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்றும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜூவை நேற்று மாலை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளார். இச்சம்பவம் நெல்லையில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது எதனால்? புள்ளி விவரங்களுடன் அமைச்சர் ரகுபதி விளக்கம்
02 Feb 2026சென்னை, பா.ஜ.க.வுக்கு வாக்குகள் விழாது என்பதால் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துளளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை: ஒரேநாளில் சவரனுக்கு 7,600 ரூபாய் குறைந்தது
02 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 7,600 அதிரடியாக குறைந்து விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ. 13,950-க்கும், ஒரு சவரன் ரூ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –02-02-2026
02 Feb 2026 -
பட்ஜெட் அறிவிப்பில் தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரியை குறைக்காததால் ஏமாற்றம்
02 Feb 2026சென்னை, மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பிலும், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி சற்று குறையும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அது தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமா
-
தமிழ்நாடு முதல்வரின் காருக்கு வழிவிட சிக்னலில் நிறுத்தப்பட்ட விஜய்யின் கார்
02 Feb 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் காருக்கு வழிவிட சிக்னலில் விஜய் கார் நிறுத்தப்பட்டது.
-
சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றி போர்முரசம் த.வெ.க.: விஜய்
02 Feb 2026சென்னை, சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசம் த.வெ.க. என்று விஜய் தெரிவித்துள்ளார்.
-
தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழா: விஜய் பங்கேற்று பேச்சு
02 Feb 2026சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழாவில் நேற்று கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசிய அதன் தலைவர் விஜய், தீய சக்தியை வீழ்த்த தூய சக்தியான தமிழக வெற்றிக்கழகத
-
பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் திராவிட மாடலின் குரல் தொடர்ந்து ஒலிக்கிறது: தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
02 Feb 2026சென்னை, பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் திராவிட மாடலின் குரல் தொடர்ந்து ஒலிக்கிறது என்று பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு தி.மு.க.
-
தலாய் லாமாவுக்கு கிராமி விருது: சீனா சார்பில் கடும் ஆட்சேபனை
02 Feb 2026பெய்ஜிங், தலாய் லாமாவுக்கு கிராமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருப்பதற்கு சீன அரசு கடும் ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ளது.
-
திடீரென மூச்சுத் திணறல்: நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி
02 Feb 2026சென்னை, நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் கண்காணிப்பில் நல்லகண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
திருப்பரங்குன்றம் வழக்கு தொடர்பாக ஐகோர்ட் கிளையில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய மதுரை கலெக்டர்
02 Feb 2026மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கு தொடர்பாக ஐகோர்ட் கிளையில் மதுரை மாவட்ட கலெக்டர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
-
திருச்சியில் பிப். 21-ல் நா.த.க. மாநாடு: 234 வேட்பாளர்களை அறிவிக்கிறார் சீமான்
02 Feb 2026சென்னை, நாம் தமிழர் கட்சியின் மாநாடு வருகிற 21-ம் தேதி திருச்சியில் நடைபெறும் என்று சீமான் அறிவித்திருந்தார்.
-
சிகிச்சை அரங்கு கட்டிடம் கட்ட மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
02 Feb 2026சென்னை, மதுராந்தகம் அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அரங்கு கட்டிடத்துக்கு ரூ.10 கோடி, மருத்துவ உபகரணங்களுக்கு ரூ.2 கோடி என மொத்தம் ரூ.12 கோடி நிதி உடனடியாக அறிவிக்க
-
பாக். ராணுவம்-தீவிரவாதிகள் இடையே தொடரும் மோதல்: 200-க்கும் மேற்பட்டோர் படுகொலை
02 Feb 2026இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படைகளுக்கும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்துக்கும் இடையே கடந்த சில நாட்களாக நடந்து வரும் சண்டையில் இருதரப்ப
-
அன்புமணி தரப்புக்கு மாம்பழ சின்னம்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் அவகாசம்
02 Feb 2026சென்னை, பா.ம.க.வுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்து, அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியதை எதிர்த்து கட்சி நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கில், தேர்தல் ஆண
-
பழனி முருகனுக்கு காவடி எடுத்த அண்ணாமலை
02 Feb 2026பழனி, தைப்பூச திருவிழாவையொட்டி தமிழக பா.ஜனதா முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்ய பழனி வந்தார்.
-
ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. தனபால் கோரிக்கை
02 Feb 2026புதுடெல்லி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாட்டின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி.
-
மாமல்லபுரத்தில் ரூ.100 கோடியில் உள்கட்டமைப்பு உள்ளிட்ட 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்
02 Feb 2026சென்னை, மாமல்லபுரம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பான அடிப்படை வசதிகள் வழங்க ரூ.
-
ஊழல் வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, குடும்பத்தினருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
02 Feb 2026டாக்கா, இரு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளில் வங்கதேச முன்னாள் பிரதமரும், அவாமி லீக் கட்சித் தலைவருமான ஷேக் ஹசீனாவுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் சிறைத்தண்டன
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
02 Feb 2026- நெல்லையப்பர் கோவிலில் தெப்பம், ரிசப வாகனம்.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் மாசி மண்டல உற்சவாரம்பம்.
-
இன்றைய நாள் எப்படி?
02 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
02 Feb 2026


